மகாபாரதக் கதைகள்

மகாபாரதக் கதைகள், எஸ்.தமயந்தி, குமரன் பதிப்பகம், பக்.112, விலை 40ரூ. உலகில் பல குணங்களை கொண்ட மனிதர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும், ஒரு காவியத்தில் காண முடியும் என்றால், அது மகாபாரதம் தான். மகாபாரதத்தை ஒரு கதை களஞ்சியம் என்றே கூற வேண்டும்; கதைக்குள் கதை என பல்லாயிரம் கதைகள் உள்ளன. கடல் போன்ற மகாபாரதத்தை, ஏழு கதைகள் மூலம், ஆசிரியர் மிகச் சுருக்கமாக தந்துள்ளார். இதை படித்தால், மகாபாரதத்தை படித்த திருப்தி ஏற்படுகிறது. குழந்தைகளிடம் இந்த புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னால், அவர்கள் […]

Read more

புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள்

புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள், எஸ். தமயந்தி, சுவாமிமலை பதிப்பகம், பக். 176, விலை 60ரூ. நீதியை கதைகள் வாயிலாகக் கூறி, இளம் உள்ளங்களை ஒழுக்க நெறிக்கு இட்டுச் செல்வதால் பஞ்ச தந்திரக் கதைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகின்றன. கதைகளை விலங்குகள் மூலம் சொல்லுவதால் சொல்ல வந்த கருத்துக்கள் இன்னும் ஆழமாகப் பதிகிறது. மாணவர்கள் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் எளிய இனிய நடையில் நூல் அமைந்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

இனி ஒரு வலியில்லா பயணம்

இனி ஒரு வலியில்லா பயணம், விஜயஸ்ரீமகாதேவன், சூரியா கம்யூனிகேஷன், பக். 56, விலை 50ரூ. நோயின் தாக்கம் முற்றிய நிலையில், ஒன்றும் செய்ய முடியாது என டாக்டர் கைவிரித்து விடுகின்றனர். நோயின் தாக்கத்தால் ஏற்படும் வலியாலும், உறவுகள் புறக்கணிப்பால் மனரீதியான பாதிப்பாலும், மரண நாட்களை பொங்கும் துன்பத்த்லும் நோயாளிகள் துவண்டுவிடுகின்றனர். அத்தகையோருக்கு, மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த நிலையில் அன்பு, ஆதரவு, அரவணைப்பு என்ற வலி தணிப்பு சிகிச்சை பாலியேட்டிவ் கேர் தேவை. மேலை நாடுகளில் இந்த வகை சிகிச்சை முறை பிரபலம் என்றாலும், நம் […]

Read more