மகாபாரதக் கதைகள்

மகாபாரதக் கதைகள், எஸ்.தமயந்தி, குமரன் பதிப்பகம், பக்.112, விலை 40ரூ.

உலகில் பல குணங்களை கொண்ட மனிதர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும், ஒரு காவியத்தில் காண முடியும் என்றால், அது மகாபாரதம் தான். மகாபாரதத்தை ஒரு கதை களஞ்சியம் என்றே கூற வேண்டும்; கதைக்குள் கதை என பல்லாயிரம் கதைகள் உள்ளன.

கடல் போன்ற மகாபாரதத்தை, ஏழு கதைகள் மூலம், ஆசிரியர் மிகச் சுருக்கமாக தந்துள்ளார். இதை படித்தால், மகாபாரதத்தை படித்த திருப்தி ஏற்படுகிறது. குழந்தைகளிடம் இந்த புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னால், அவர்கள் மனதில் மகாபாரதத்தை மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும்.

நன்றி: தினமலர், 3/12/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *