இயேசு அந்தாதி
இயேசு அந்தாதி, வா.மு.சேதுராமன், கவியரசன் பதிப்பகம், பக்.48, விலை 100ரூ.
இயேசுவின் இறையருளைப் பற்றியும், மானிடக் குலத்துக்கு எடுத்துக் கூறும் போதனைகளையும் நல்ல கவிநயத்துடன் தன் கவிதை யில் ஓட விட்டுள்ளார் நுால் ஆசிரியர். நல்ல சொல்வளம், கவித்துவம், காவியம் முழுவதும் நிரம்பி, கவிமணம் வீசுகிறது.
உலகைப் படைத்தவரே உவந்து மனித உருவில் வந்தார். தன் மானுடவதாரத்தின் முக்கிய மனிதன் நல்லவனாக வாழ வேண்டும்; தீமையை விட்டு விலக வேண்டும். அதுவே, இம்மையிலும் மறுமையிலும் மனிதனுக்கு நன்மை பயப்பதாக அமையும் என்கிறது இந்நுால்.
நன்றி: தினமலர், 3/12/2017.