பஞ்ச தந்திரக் கதைகள்
பஞ்ச தந்திரக் கதைகள், ஜெ. குமணன், பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், 167, கந்தசாமி வீதி, ஒலம்பஸ், இராமநாதபுரம், கோவை – 45. விலை ரூ. 156
மகிளாரூப்பியம் நகரை ஆண்ட அமரசக்தி என்ற திறமையான மன்னனுக்கு மூன்று புதல்வர்கள். இம்மூவரும் சர்வ முட்டாள்கள். வருத்தம் அடைந்த மன்னன், தனது ராஜகுருவின் ஆலோசனைப்படி, சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த விஷ்ணு சர்மனை அணுகி, தனது பிள்ளைகளைப் புத்திசாலிகளாக மாற்றித் தர கோரினான். விஷ்ணுசர்மன் அதை ஏற்று ஆறே மாதங்களில் சாதித்துக் காட்டுகிறார். அதற்கு அவர் பஞ்ச தந்திரம் என்ற ஐந்து வகையான தந்திரங்களை உள்ளடக்கிய ஏராளமான கதைகளைக் கூறி, எளிமையான முறையில் உலக அறிவையும், நிர்வாகத் திறமைகளையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார். இதுதான் பஞ்சதந்திரம் பிறந்த கதை. சரித்திர கால கதைகளாக இருந்தாலும், இன்றைய இளைய தலைமுறையினருக்கும் வாழ்க்கையை வெற்றி கொள்வதற்கான ஐந்து வழிகளைக் கூறும் கதைகளாக இவை அமைந்துள்ளன. வக்கிர எண்ணங்களைத் தூண்டும் இன்றைய நவீன பொழுதுபோக்கு சாதனங்களில் இருந்து சிறுவர் சிறுமிகளைத் திசை திருப்ப, இதுபோன்ற நூல்கள் பெரிதும் உதவலாம்.