அறிஞர்களின் வாழ்வில் அற்புத நிகழ்ச்சிகள்

அறிஞர்களின் வாழ்வில் அற்புத நிகழ்ச்சிகள், மெர்வின், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை – 17, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-8.html

அரசியல் தலைவர்கள், தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள், கவிஞர்கள் என பல்வேறு அறிஞர்களின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன.  

—-

அடுத்தது என்ன, சி.எஸ், தேவநாதன், லியோ புக் பப்ளிஷர்ஸ், 36, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி.நகர், சென்னை – 35, விலை 90ரூ.

ஒவ்வொரு மனிதனின் கனவு, குறிக்கோள், முயற்சி, திட்டமிடல், வெற்றி அடையும் விதம் ஆகியவற்றை விளக்கியுள்ளது அருமை. மாணவர்கள், வேலை தேடுபவர்கள், தொழில் செய்பவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயன் தரும் வகையில் நூலை படைத்துள்ளார் ஆசிரியர். வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் ஒரு ஏணியாக இந்நூல் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  

—-

ஆங்கிலம் ஆங்கிலம் தமிழ் அகராதி, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 250ரூ.

ஆங்கிலச் சொற்களுக்கு, ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றில் பொருள்கூறும் அகராதி. 1504 பக்கங்கள் கொண்ட இந்த மெகா அகராதி, சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. அச்சும், கட்டமைப்பும் அருமை, தமிழில் வெளிவந்துள்ள இத்தகைய அகராதிகளில், இது முக்கிய இடத்தைப் பெறுகிறது என்று கூறினால், அது மிகையாகாது. நன்றி – தினத்தந்தி, 06 பிப்ரவரி 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *