ஸ்ரீ சேஷாத்ரி மகான் வரலாறும் பக்தர்களின் நேரடி அனுபவங்களும்
ஸ்ரீ சேஷாத்ரி மகான் வரலாறும் பக்தர்களின் நேரடி அனுபவங்களும்,சேஷ. அனு. வெண்ணிலா, மேகதூதன் பதிப்பகம், சென்னை 5, விலை 240ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-808-7.html மகான்களின் சரிதங்களை, இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கப்போகிறது’ என்று மனம் சலனப்படாமல் ஆழ்ந்து படிக்க வேண்டும். திருவண்ணாமலையில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்து சித்தியடைந்த மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் வரலாறும் அத்தகையதுதான். வாழ்க்கை வரலாறு மட்டுமின்றி சுவாமிகளோடு பழகும் பேறு பெற்ற பலரின் ஆன்மிக அனுபவங்களையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் இந்த நூலை எழுதியுள்ள சேஷ. அனு. வெண்ணிலா. பூஜை அறை தீபம்தானே சுடர்விடும், மின் விளக்குகள் தாமே அணைந்து எரியும், பாம்பு வடிவில் சுவாமி தென்படுவார், என்றெல்லாம் திகில் செய்திகள் உண்டு. சுவாமியின் தோற்றம், உட்காரும் முறை, உணவு முறை, ஆடைகளில் பற்றற்ற நிலை என்று வெகு விரிவாகப் பல அனுபவங்களைப் படிக்கலாம். மகானின் அன்பர்களுக்குப் பெரு விருந்தான நூல் இது. நன்றி – கல்கி, 4 நவம்பர் 2012.