தாமிரபரணிக் கரை
தாமிரபரணிக் கரை, பொன்னுசாமி தினகரன், அனிதா பதிப்பகம், ஸ்பிக் நகர் எதிர்ப்புறம், தூத்துக்குடி, பக்கங்கள் 272, விலை 125ரூ.
பல்வேறு இதழ்களில் பல்வேறு காலக்கட்டங்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு. நெல்லை, தூத்துக்குடி, மாவட்ட மண்வாசனை மிகுந்த கதைகள்தான் அதிகம். பெண் அடிமை, வறுமையின் கோரமுகம், முதியோர் படும் அவலம், அரசியல் அராஜகங்கள், ஊழல், கொடுமை என்று சிறுகதைகள் தோறும் சமகால பிரச்னைகளே அலசப்படுவதால் படிக்க சுவாரஸ்யம் கூடுகிறது. பாசத்தில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் லட்சுமிகளையும் ஆதவன்களையும் தாமிரபரணிக் கரையெங்கும் உலவ விட்டிருக்கிறார் ஆசிரியர். படிப்போரை தங்களில் ஒருவரைக் கதைகளில் தேடும் உணர்வை எழவைக்கிறது. நன்றி: குமுதம், 20 பிப்ரவரி 2013.
—–
ஒரு குடையின் கீழ் உலக் தமிழினம், குரும்பாசிட்டி ரா. கனகரத்தினம், உலகதமிழர் ஆராய்ச்சி மையம், 12/1, பாலமுருகன் தெரு, அய்யப்பநகர், கே. கே. நகர், திருச்சி – 620 021, விலை: ரூ.100
உலகத்தில் பல்வேறு நாடுகளில் கடல் கடந்து வாழும் தமிழர்கள், அங்கு அவர்களின் தொடக்க கால வாழ்வியல் உள்ளிட்ட அரிய தகவல்களை ஆதாரங்களுடன் தொகுத்துள்ளார், நூலாசிரியர். பல நாடுகளில் குடிப்பெயர்ந்த தமிழர்கள் அந்த நாடுகளின் பொருளாதார வளார்ச்சிக்கு வித்திட்டதையும் பட்டியலிட்டுள்ளார். உலக தமிழர்கள் தமிழை, தமிழ் பண்பாட்டை பின்பற்றி தமிழர்களாகவே வாழவேண்டும். அவர்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற தனது வேட்கையின் வெளிப்பாடாக நூலை வடிவமைத்துள்ளார். நன்றி: சென்னை (13.3.2013).
—–
அதிக ஆற்றல் வாய்ந்த மனிதார்களின் 7 பழக்கங்கள், மஞ்சள் பப்ளிஷிங் ஹவுஸ், 2 – வது மாடி, உஷா பிரிட் காம்ப்ளக்ஸ், 42, மால்வியா நகர், போபால் – 452 003, விலை: ரூ.325.
”அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்” என்ற தலைப்பிலான தனிநபர் மாற்றத்திற்கான சக்திமிக்கப் படிப்பினைகள் அடங்கிய இந்தப்புத்தகத்தை அமெரிக்க வாஷிங்டனில் உள்ள பிரிஹாம் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீபன் ஆர். கவி எழுதி உள்ளார். இதனை தமிழில் மும்பையைச் சேர்ந்த நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். உலகம் முழுவதும் 2 கோடி பிரதிகள் விற்பனை செய்யப்பட்ட இந்த நூல், 40 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முன்யோசனையுடன் செயலாற்றுதல், முடிவை மனத்தில் வைத்துத் துவஙகுதல், முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல். “எனக்கும் வெற்றி உனக்கும் வெற்றி” என்ற சிந்தனை, முதலில் புரிந்து கொள்ளுதல், பின்னர் புரிய வைத்தல் , கூட்டு இயக்கம், ரம்பத்தைக் கூர்தீட்டிக் கொள்ளுதல் ஆகிய ஏழு பழக்கங்களையும் மையமாக கொண்டு எழுதப்பட்ட நூலாகும். வாழ்க்கையில் ஆழமான உள்நோக்குகள் மற்றும் சுவையான உண்மைச் சம்பவங்களின் வாயிலாக, நியாயம், நாணயம், சேவை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் வாழ்வதற்கான வழிமுறைகளை நூலாசிரியர் கூறி உள்ளார். நன்றி: சென்னை (13.3.2013).