பாம்பன் சுவாமிகள் மனித மேம்பாட்டுச் சிந்தனைகள்

பாம்பன் சுவாமிகள் மனித மேம்பாட்டுச் சிந்தனைகள், முனைவர் கோமதி சூரிய மூர்த்தி, திருவேரகம், 117, 86வது தெரு, முதல் அவென்யூ, (வடக்கு) அசோக் நகர், சென்னை 600083, பக்கங்கள் 134.

முருகனையே முழுதும் வாழ்வில் பற்றாக்கொண்டு 6666 பாடல்கள் பாடி அருளியவர் பாம்பன் சுவாமிகள். இவரது அருட்பாடல்களில், மனிதனை வாழ்வில் உயர்த்தும் பல்வேறு சிந்தனைகள் பரவிக் கிடக்கின்றன. குருவி, நெல்மணிகளை தேடித்திரட்டுவதுபோல் இந்நூல், ஆசிரியர் சிந்தனை முத்துக்களைத் தேடித் தொகுத்துள்ளார். திருக்குறள், திருமந்திரம், தேவாரம், திருப்புகழ், தாயுமானவர் பாடல்களோடு பாம்பனார் பாடல்களை இணைத்து நவமணி மாலையாகத் தந்துள்ளார். எல்லாத் தள்ளினும் எனை நம்பியோரைத் தள்ளாதே என்று சுவாமிகள் கூறுவதிலிருந்து சமுதாய மேம்பாடே தன் மேம்பாட்டை விடவும் அவர் நோக்கமாய் இருந்ததை அறியலாம். முருகன் அருள் பெற்ற பாம்பன் சுவாமிகளின் சிந்தனைகளை வாசிக்கவும், வாழ்வாக்கவும், வழிகாட்டவும் அருள் நூல்.  

—-

 

நெப்போலியன் ஹில் விதிகள், சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை 17, பக்கங்கள் 440,விலை 200ரூ.

வெற்றி விதிகளின் கோட்பாடுகளை ஆராயும் பணி, 1908ல் ஆரம்பமாயிற்று. எக்கு தொழிலின் சக்ரவர்த்தியாக இருந்த ஆண்ட்ரு கார்னகியை பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக அவரை பேட்டி காண நெப்போலியன் ஹில் சென்றிருந்தார். இளம் எழுத்தாளராக இருந்த நெப்போலியன் ஹில்லை கார்னகிக்கு பிடித்துப்போய்விட்டது. பேட்டி மூன்று நாள் தொடர்ந்தது. அப்போது அமெரிக்காவில் செல்வாக்கோடு திகழ்ந்த பல பெரிய மனிதர்களை ஹில்லுக்கு அறிமுகப்படுத்தினார். அந்த மனிதர்களின் வெற்றி ரகசியங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள ஊக்கம் அளித்தார். நெப்போலியன் ஹில் வெற்றிச் சூத்திரத்தை உருவாக்கினால் அதை பயன்படுத்தும், ஒவ்வொரு தனி மனிதனும் தன் சொந்த வெற்றியைப் படைத்து கனவை நனவாக்கிக் கொள்ள முடியுமென்று நம்பினார் கார்னகி. 1927ம் ஆண்டு அவர் தனது வெற்றி விதிகளின் முதல் பதிப்பை வெளியிட்டார். 8 வார்ல்யூம்களும் உடனே விற்று தீர்ந்து விட்டது என்று இந்த நூல் உருவான அந்த வெற்றி விதிகள் எல்லாக் காலத்துக்கும் ஏன் இப்போது கூட கச்சிதமாக பொருந்துவதுதான் வியப்பு.  

—-

 

மிஸ்டர் மனிதன், ஆதனூர் சோழன், நக்கீரன், 105, ஜானி ஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14, பக்கங்கள் 384, விலை 200ரூ.

காட்டு மிருகங்களுடன் கலந்திருந்த ஆதிகாலம் முதல் கணினியுடன் அங்கமாகிவிட்ட நவீன யுகம் வரையிலான மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி, நாகரீகம், அரசியல் வரலாறு எளிய நடையில் இந்த நூல் தரப்பட்டுள்ளது. நன்றி :தினமலர் 25, மார்ச் 2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *