சிவதரிசனம்

சிவதரிசனம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-7.html

மொகஞ்சதாரோ காலத்திலேயே (கி.மு. 3250) சிவ வழிபாடு இருந்துள்ளது என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கூற்ற. காலத்தால் மூத்த மிகப் பழமையான சிவ வழிபாட்டின் அருமை பெருமையை சிவலிங்கத் தத்துவம், பைரவர் தத்துவம், கணேசர் தத்துவம், முருகன் தத்துவம், நடராஜர் தத்துவம், போலோநாத் தத்துவம் ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் நூலாசிரியர் விளக்கியுள்ளார். இடையிடையே வடமாநிலங்களில் உள்ள சிவன் கோயில்கள் பற்றிய தகவல்களையும் புராணக் கதைகளையும் கூறியுள்ளார். சிவன் மிக உயர்ந்த தபஸ்வீ. தனது வெப்பத்தை அவர் வெளி உலகிற்குச் செலவிடுவதே இல்லை. அவர் உற்பத்தி செய்யும் வெப்பம் அனைத்தையும் தனது உடலிலேயே அடக்கி வைத்திருக்கிறார். சிவ லிங்கம் என்பது தவ நெருப்பு, முடிவில்லா அக்கினித் தூண், கற்பனையின் ஊற்றுக்கண். இதைச் சுற்றி இயற்கை நடனம் புரிகிறது. இவ்வரிகள் சிவலிங்கத் தத்துவத்தின் இறுதியில் உள்ளன. சிவ ஆலயங்களில் சக்தியைத் தவிர்த்துவிட்டு சிவனை மட்டும் வணங்குவதில்லை. லிங்கம், இலை வடிவ தொட்டியிலிருந்து உருவாகி வடமுனை விண்மீன் இருக்கும் வடதிசையைச் சுட்டிக்காட்டுகிறது. இதுவே தேவியின் கருப்பைக்கு செல்லும் யோனி என்னும் வாசல். கோவிலோ, கர்ப்பக்கிரமோ அவை கருப்பை இருக்கும் இடம். அங்கேதான் சிவனை சக்தி மூடி வைத்திருக்கிறாள். அதனால், சக்தி மூலம்தான் சிவனை அடைய முடியும். – இவை போன்ற தத்துவார்த்தமான பல செய்திகள் இந்நூலில் அடங்கியுள்ளன. படித்து, சிவனை உய்த்துணர வேண்டிய சிவதரிசனம். நன்றி: தினமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *