அரசியல் சதுரங்கம்
அரசியல் சதுரங்கம், சோலை, நக்கீரன், 105 ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 140ரூ.
அரசியல் விமர்சகர் சோலை நக்கீரன் வார இதழில் எழுதிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. இந்த கட்டுரை தொடர் வெளியான காலகட்டத்தில் பரபரபப்பாக பேசப்பட்ட உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரையிலான விஷயங்களை தனது பாணியில் அலசி ஆராய்ந்து எழுதியுள்ளார். கட்சிபேதமின்றி உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் தைரியம் அவரது எழுத்தில் பளிச்சிடுகிறது. சமுதாய நோக்குடன் உண்மைகளை ஆணித்தரமாக எழுதியிருப்பது சிறப்பு.
—-
முத்திரை நினைவுகள், ஜே.எம்.சாலி, இலக்கிய வீதி, 52-3, சவுந்தர்யா குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு விரிவு, சென்னை 101, விலை 120ரூ.
சிறுவயதிலேயே எழுத்துத் துறையில் சாதனை படைக்க விரும்பிய ஜே.எம். சாலி, கண்ணன் சிறுவர் இதழில் முதல் கதையை எழுதினார். பிறகு ஆனந்த விகடனில் எழுதிய முத்திரைக் கதைகள், அவருக்குப் புகழ் தேடித்தந்தன. சிங்கப்பூர் தமிழ்முரசு பத்திரிகையில் நீண்ட காலம் பொறுப்பாசிரியராகப் பணிபுரிந்தார். விகடன் மயன் பத்திரிகைகளில் பணியாற்றியதுடன், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் பணிபுரிந்தார். அவருடைய அனுபவங்கள் வளரும் எழுத்தாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் மிகவும் பயனளிக்கக் கூடியவை. அந்த நோக்கத்தில் அவர் எழுதிய கட்டுரைத்தொடர் முத்திரை நினைவுகள் என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது. எழுத்துத்துறையில் ஆர்வம் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
—-
நீங்களும் எளிதாக ஆங்கிலம் பேசலாம், ஆர். ஜான், பர்ஸ்ட் எடிஷன், 1620, ஜே. பிளாக், 16வது மெயின் ரோடு, அண்ணாநகர், சென்னை 40, விலை 100ரூ.
உலக வாழ்க்கையில் பலரோடு உரையாட ஆங்கிலம் அவசியம். அந்த வகையில் எளிய முறையில் ஆங்கிலம் பேச 32 தலைப்புகளில் ஆர். ஜான் இந்த நுலில் கற்றுத்தருகிறார். நன்றி: தினத்தந்தி 22/2/2012.