பிஞ்சுச் சாவு
பிஞ்சுச் சாவு, தொகுப்பு நூல்-நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை1 25ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-7.html
தமிழகத்தையே உலுக்கி கொதி நிலைக்கு தள்ளியது பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பான புகைப்பட காட்சி. அந்த பாலகன் மரணத்திற்காக தமிழின் முன்னணி கவிஞர்கள் கவிதாஞ்சலியாக எழுதிய கவிதைகளின் தொகுப்பு. படிக்கும்போதே பதற வைக்கும் கவிதைப்பதிவுகள்.
—-
புத்தகம் பற்றிய புத்தகம், ஜெ. வீரநாதன், எஸென்ஷீயல் பப்ளிகேஷன்ஸ், கணேசபுரம், கோவை 642045, விலை 275ரூ.
புத்தக வரலாறு, புத்தகங்கள் உருவாகும் விதம், முக்கிய நூல்கள், புத்தக வகைகள் என புத்தகங்கள் சார்ந்த செய்திகளின் தொகுப்பு. காப்புரிமை, ஐ.எஸ்.என் போன்றவை குறித்த விரிவான தகவல்கள் பயனுள்ளவை. புத்தகம் பற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றின் ஒரு பக்கம்தான் இந்த புத்தகம் என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நன்றி: இந்தியா டுடே, 7/8/13.
—-
இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-4.html
தமிழில் கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், நாவல்கள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை அளித்துள்ள இந்திரா பார்த்தசாரதியின் கட்டுரைகள் அடங்கிய நூல் இது. தமிழகம், இந்தியா மற்றும் உலக இலக்கியங்கள், அரசியல் மற்றும் சமூகத்தை ஆய்வு செய்து கட்டுரைகளாக தந்துள்ளார் ஆசிரியர். மேலும் நாகரிகம், காதல், கற்பு, நட்பு, தமிழ் ஈழம் உள்ளிட்ட பலவற்றை அலசியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 31/7/13.