சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும்

சர்வதேச பயங்கரவாதமும் இந்திய பயங்கரவாதமும், டி.ஞானையா, அலைகள் வெளியீட்டகம், சென்னை 24, பக். 416, விலை 260ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-504-4.html

உலக அளவிலும் இந்தியாவிலும் உள்ள பயங்கரவாத இயக்கங்களின் போக்குகளைப் படம்பிடித்துக் காட்டும் நூல். அரசை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல, அரசை நடத்துகிறவர்களும், பயங்கரவாதத்தன்மையுடன் செயல்படுகிறார்கள் என்றும், இதற்கு உதாரணமாக இந்தியாவில் 20ஆம் நூற்றாண்டின் துவக்க காலக்கட்த்தில் ஜாலியன்வாலாபாக் படுகொலையை பயங்கரவாதத்தன்மையுடன் பிரிட்டிஷ் ராணுவம் நிகழ்த்தியதை நூல் சுட்டிக்காட்டுகிறது. பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடிய பகத்சிங் போன்றவர்களும் பயங்கரவாதிகள் எனக் கருதப்பட்டனர். பயங்கவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று தீவிரமாகச் செயல்படுவதைவிட எந்தப் பிரச்னைகளால் பயங்கரவாதம் தோன்றியதோ அந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதே பயங்கரவாதம் தோன்றாமலிருக்க வழி என்றும் சர்வதேச அளவில் பயங்கரவாத்தின் மீது அமெரிக்கா பிரகடனப்படுத்தும் முடிவற்ற போர் என்பது அதன் ஏகாதிபத்தியத் திட்டங்களில் ஒன்று என்றும், இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்ட மறுகணமே அமெரிக்க தூக்க மாத்திரையில்லாமல் நிம்மதியாகத் தூங்க முடியும் என்றும் நூல் கூறுகிறது நன்றி: தினமணி, 12/3/2012.  

—-

 

மீனாட்சி மைந்தன் வி.என். சிதம்பரம் – ஒரு சகாப்தம், மு. பிரசன்ன வெங்கடேசன், புதுகை இளைஞர்கள் இலக்கிய நட்பு வட்டம், ஜி4, மீனாட்சி பிளாட்ஸ், ஸ்டேட் பாங்க் காலனி, முதல் குறுக்குத் தெரு, நங்கநல்லூர், சென்னை 61, விலை 75ரூ.

தொழில் அதிபர், பேச்சாளர், எழுத்தாளர், ஆன்மிகவாதி என பன்முகங்களை கொண்டு வாழ்ந்த வி.என்.சிதம்பரம் குறித்த தகவல்கள் அடங்கிய நூல். வி.என். சிதம்பரத்துடன் பழகிய பல்வேறு தலைவர்களின் அனுபவங்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 4/9/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *