பெரியார் பாதை

பெரியார் பாதை, நிலா சூரியன் பதிப்பகம், 27/2, தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 75ரூ.

சாதிமுறையை ஒழித்துத் தீண்டாமை அகற்றி, திராவிடனின் பெருமையை வரலாற்று வழியாக நிலைநிறுத்தி, பகுத்தறிவு மிக்க, கல்வியறிவு மிக்க சமுதாயம் உருவாக்க வேண்டுமென கடுமையாக உழைத்தார் தந்தை பெரியார். சமுதாயத்துக்காக அவர் ஆற்றிய தொண்டும், சேவையும், புரட்சியும் ஈடு இணையற்றது. அத்தகைய புகழ்பெற்ற பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை ரத்தினச் சுருக்கமாக புதுக்கவிதை நடையில் படைத்திருக்கிறார் நூலாசிரியர் பேரா. செ. ஏழுமலை.  

—-

 

சாதனை உங்கள் கையில், குருபிரியா, ஆப்பிள் புக்ஸ், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு,அமிஞ்சிக்கரை, சென்னை 29, விலை 55ரூ.

சமுதாயச் சூழலில் மனிதனுக்கு நேரும் இன்னல்கள் என்னென்ன என்றும், அவற்றை எதிர்கொண்ட சாதனை செய்வது எப்படி என்றம் வழிகாட்டுகிறது இந்த எளிய நூல்.  

—-

 

தமிழ் இலக்கிய வரலாறு, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 99ரூ.

தமிழ் இலக்கிய, இலக்கண வளமும், பழமையும் சிறப்பும் கொண்டு துலங்கும் மொழியாகும். இம்மொழியில் தோன்றிய இலக்கியங்களின் தோற்றம், வளர்ச்சி, வாழ்வு, இன்றைய நிலை ஆகியவை பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல். தமிழ் இலக்கிய வரலாறு தெளிவாகவும், செம்மையாகவும், சுருக்கமாகவும் அமைந்துள்ளது. பேராசிரியர்களாலும், தமிழ் பயிலும் இலக்கிய மாணவர்களாலும் தமிழ் இலக்கியம் குறித்து அறிந்து கொள்ளும் வண்ணம் இந்நூலை படைத்திருக்கிறார் பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன். நன்றி: தினத்தந்தி, 18/9/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *