அவஸ்தை
அவஸ்தை, யூ.ஆர். அனந்தமூர்த்தி, தமிழில்-நஞ்சுண்டன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 208, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-193-0.html
பிரபல கன்னட எழுத்தாளரான யூ.ஆர்.அனந்த மூர்த்தி எழுதி 1978ல் வெளிவந்த அவஸ்தேவின் மொழிபெயர்ப்பு. அனந்தமூர்த்தியின் பெரும்பாலான எழுத்துக்களைப் போலவே மரபுக்கும் புதுமைக்கும் இடையே நடைபெறும் போராட்டம்தான் இந்தக் கதையும் சித்தாந்த அடிப்படையில் ஒரு சமூகப் பிரிவின் வீழ்ச்சியும் புதிய குழுக்கள் அதிகாரம் ஏற்பது பற்றியும் நாவல் பேசுகிறது. கிராமத்தில் மாடு மேய்த்து வந்த ஒரு சிறுவன் சமகம் அங்கீகரிக்கும் தலைவனாகிறான். கட்சி அரசியல் அதிகாரம் நோக்கிய அவனுடைய வாழ்க்கைப் பயணம்தான் கதை. உடல் ரீதியாக இயலாமை அவனைத் தாக்கும்போது ஒரு பின்கோக்கியப் பார்வையில் நம்மை சதா சூழ்ந்திருக்கிற கீழ்மையிலிருந்து நமக்கு விடுதலை சாத்தியமில்லை என்பது எனக்கு இப்பத் தெரிஞ்சுடுச்சு என்கிறான். கரை சேராதவர்களின் கோபம் சமூகத்தின் சிறுமையை எரிக்கும் என்று ஆசை இருக்கு என்கிறான். இதில் இந்திய சமூகத்தைப் புரிந்து கொள்வதில், குறைந்தபட்சம் இதை எழுதிய காலத்தில், ஆசிரியருக்குத தத்துவச் சிக்கல் இருப்பது தெரிகிறது. நன்றி: தினமணி, 9/4/12.
—-
விஜய் கார்ட்டூன்ஸ் புத்தகம், எமரால்டு பதிப்பகம், 15 ஏ, முதல் தளம், காஸா மேஜர் ரோடு, எழும்பூர், சென்னை 8, விலை 100ரூ.
தினசரி வாழ்க்கையில் நடக்கும் செயல்களை கார்ட்டூன்களாக வரைந்து தொகுக்கப்பட்ட நூல் விஜய் கார்ட்டூஸ். சென்னை லயோலா கல்லூரி விசுவல் கம்யூனிகேசன் மாணவர் விஜய் இதனை தொகுத்துள்ளார். நூல் முழுவதும் 10 தலைப்புகளில் உள்ள வித்தியாசமான கார்ட்டூன்கள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. தினத்தந்தி.
