சங்கர காவியம்

சங்கர காவியம், பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மகானின் புனித வாழ்க்கை வரலாறு, டால்மியாபுரம் கணேசன், அகஸ்தியர் பப்ளிகேஷன்ஸ்.

காஞ்சி மாமுனிவர் வாழ்வை, நடந்த சம்பவங்களை, அதில் வந்த நிஜ பாத்திரங்களை நாடக வடிவில் உலாவ விட்டிருக்கிறார் ஆசிரியர். இவைகளைப் படித்தால், எந்த அளவு அவர் பணத்தின் மீது சிறிதும் ஆசையின்றி, சிறந்த ஏழை பக்தர்களுக்கு உதவ காரணமாக இருந்தார் என்பதும், அவர் நிகழ்த்திய அருள் சம்பவங்களும் விரிவாக தரப்பட்டிருக்கின்றன. காஞ்சி முனிவரை நேசிக்கும் அனைவரும் இந்த நூலை விரும்பி ரசிப்பர்.  

—-

 

திரை வளர்க்கும் நான் நான் வளர்க்கும் திரை பதிவுகள்… பகிர்வுகள்… பார்வைகள், மு. இராமசுவாமி, செம்பி படைப்பகம்.

தமிழர் வாழ்வில் திரைப்படம் புகுந்ததை அனுபவ வரலாறாக பதிவு செய்துள்ளது இந்த புத்தகம். மூன்று இயல்களை கொண்டுள்ளது. பதிவுகள் என்ற முதல் இயலில், வாழ்க்கை அனுபவம் பதிவாக உள்ளது. அந்தந்த வயது நிகழ்வுகளை, அதே எண்ண ஓட்டத்துடன் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். தமிழ் சினிமா, சாதாரண ரசிகனின் அனுபவ வெளியில் ஏற்படுத்திய தடயங்களாக இவை உள்ளன. சினிமா தியேட்டர் வாசலில் நிகழும் மூன்று சீட்டு சூதாட்டம், அந்த அனுபவம் சார்ந்து, அகமனம் எடுக்கும் சபதம், இதுபோன்ற சம்பவங்களும் அவை அற்புதம் பதிவாகியிருக்கிறது. சினிமாவை பார்த்து உருவாக்கிய அறத்தை, சினிமாவில் நடித்தபோது அழிக்க நடக்கும் முயற்சியின்போது, இயல்பாக நிற்கும் மனசாட்சி நேர்மையாக பதிவாகி உள்ளது. மற்ற இரண்டு இயல்கள் பேட்டி மற்றும் சினிமா பற்றிய விமர்சனத்தை உள்ளடக்கி உள்ளன. சினிமா கலை பரிமாணங்களை நேர்த்தியான உள்ளடக்கமாக கொண்டுள்ளது இந்த நூல். நன்றி: தினமலர், 10/11/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *