காலம்

காலம் சிறுகதைகள், தேவ விரதன், வசந்தா பிரசுரம், பக். 192, விலை 120ரூ.

பிரபல வார இதழ்களில் வெளியான, பரிசும், பாராட்டுக்களும் பெற்ற ஆசிரியரின் 28 சிறுகதைகளின் தொகுப்பு. தினமலர் வாரமலரில் இவர் எழுதிப் பிரசுரமாகிய கதைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலின் மற்றொரு சிறப்பு, சிறுகதைக்கு ஆரம்ப வரிகள் கிமவும் முக்கியம் என அன்பர்கள் சொல்வதுண்டு. இந்த தொகுப்பில் உள்ள எல்லா கதைகளின் கடைசி நான்கு வரிகளும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதைக் கவனித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. நல்ல சிறுகதைகளின் தொகுப்பு. -ஜனகன்.  

—-

 

முதுமையே வா வா வா, பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராசன், விகடன் பிரசுரம், பக். 328, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-728-2.html

தடுக்க முடியாதது முதுமையின் வரவு. முதுமையின்போதுதான் பலரும், பலவித நோய்களுக்க உள்ளாகின்றனர். இந்நூல் முதுமைப் பருவத்தினர் சந்திக்கும் பல நோய்களுக்கும் காரணங்கள் கூறி, அதற்குரிய சிகிச்சைகளையும் கூறுகிறது. 56 தலைப்புகளில் நூலாசிரியர் தகுந்த மருத்துவம் குறித்த செய்திகளைக் கூறியுள்ளார். மருந்துகளைப் பயன்படுத்தும் முறைகளையும், தொற்று நோய்களையும், தொற்று சாரா நோய்களையும் விரதங்களின் நன்மைகளையும் பிராணாயாமத்தின் உயர்வையும், நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகளின் அவசியத்தையும் நோய்களுக்கு ஏற்ற வகையில் இவற்றைப் பயன்படுத்துவது பற்றியும் நூலாசிரியர் விளக்குவது அனைத்து வயதினருக்கும் பயன்படும். நூலின் இறுதிப்பகுதியில், இளைஞர்களைச் சிந்திக்க வைக்கும் கட்டுரையும், நீங்களும் நானும் என்ற கேள்வி பதில் பகுதியும் நூலிற்குப் பெருமை சேர்க்கின்றன. -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி; தினமலர், 22/12/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *