உனக்காக காத்திருந்தேனே
உனக்காக காத்திருந்தேனே, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை 108, விலை 250ரூ.
இது புதுமையான கவிதை நூல். நூலாசிரியர் எஸ். விஜயராஜ், பத்திரிகையாளராக இருந்தவர். வானொலி நாடகங்களும்,மேடை நாடகங்களும் எழுதியவர். இதயம் தேடும் உதயம், சித்திரம் பேசுதடி என்ற இரண்டு திரைப்படங்களுக்கு கதை, வசனம், பாடல்கள் எழுதியதுடன் இயக்கவும் செய்தவர். படங்களுக்கு எழுதிய கவிதைகளும், தனியாக எழுதிய கவிதைகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இதில் புதுமை என்னவென்றால், ஒவ்வொரு கவிதைக்கு முன்னாலும், கவிதை உருவான சூழ்நிலை, படத்தில் இடம் பெற்ற பாடல் என்றால் அது, எத்தகைய காட்சியில் வருகிறது என்பதை சுவைபட எழுதியுள்ளார். வெற்றிகரமான புதிய முயற்சி.
—-
செல்வச் செழிப்போடு வாழ ஏற்றுமதி வணிகம், கே.எஸ். பப்ளிஷர்ஸ், 43, முதல்மாடி, சுந்தர்ராஜ் தெரு, முதலியார்பேட்டை, புதுச்சேரி 605004.
படித்துவிட்டு, வேலை கிடைக்காமல் திண்டாடும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாய் இந்த நூலை எழுதியிருக்கிறார் பி. சோமசுந்தரம். ஏற்றுமதி மூலம் செல்வச் செழிப்போடு வாழலாம் என்று கூறும் இவர் ஏற்றுமதி வணிகத்தின் பொருட்டு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ரஷியா, சிங்கப்பூர், வியட்நாம் முதலான நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தவர். தான் பணியாற்றிய நிறுவனத்தின் ஏற்றுமதியை, ஐந்தாண்டு காலத்தில் 10 மடங்கு உயர்த்தி சாதனை புரிந்தவர். ஏற்றுமதி செய் யவிரும்புவோர், எதை, எப்படி, எப்போது செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளக்கியுள்ள்ர். ஏற்றுமதிக்கு வேண்டிய தகவல்கள் கொண்டட ஒளிப்பேழை (சி.டி) யும் புத்தகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 2/1/2014