சிலம்பம் படம் பாடம்

சிலம்பம் படம் பாடம், பூ. திருமாறன், டிரஸ்ட் நிறுவனம், 91ஏ, மேற்குத் தெரு, வெங்கடாம்பட்டி, கடையம் வழி, ஆலங்குளம் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம், பக். 195, விலை 100ரூ. தமிழர்களின் தற்காப்புக் கலைகளுள் தலையாயது சிலம்பம். பாரம்பரியமும் பழைமையும் கொண்ட இக்கலையின் நுட்பங்களையும் சூட்சுமங்களையும் நெறிமுறையையும் அதன் ரகசியங்களையும் நூல்வழி கற்றுத் தரும் புதிய முயற்சி இந்நூல். சிலம்பாட்டத்தின் வரலாற்றோடு அதன் நேர்த்தியைச் சொல்லும்போதே அக்கலையை நாமும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது. எதிரியின் தாக்குதல்களை சமாளிக்க உதவும் கருங்குருவி நிலை முதல் […]

Read more

உனக்காக காத்திருந்தேனே

உனக்காக காத்திருந்தேனே, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை 108, விலை 250ரூ. இது புதுமையான கவிதை நூல். நூலாசிரியர் எஸ். விஜயராஜ், பத்திரிகையாளராக இருந்தவர். வானொலி நாடகங்களும்,மேடை நாடகங்களும் எழுதியவர். இதயம் தேடும் உதயம், சித்திரம் பேசுதடி என்ற இரண்டு திரைப்படங்களுக்கு கதை, வசனம், பாடல்கள் எழுதியதுடன் இயக்கவும் செய்தவர். படங்களுக்கு எழுதிய கவிதைகளும், தனியாக எழுதிய கவிதைகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இதில் புதுமை என்னவென்றால், ஒவ்வொரு கவிதைக்கு முன்னாலும், கவிதை உருவான சூழ்நிலை, படத்தில் இடம் […]

Read more