நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள்

நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள், பா. பிரவீண்குமார், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 95ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-841-0.html முன்பு, தங்களுக்கு வந்த நோய் என்ன என்பதைக்கூட அறியாமல் இறந்தவர்கள் பலர் உண்டு. இன்று, எந்த நோயாக இருந்தாலும் சரி, அதற்குத் தீர்வு உண்டு என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஜு.வி.யில் டாக்டர் விடகன் பகுதியில் தொடராக வெளிவந்த மருத்துவக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். உயிருக்கும், உடலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள். அவை ஏற்படக் காரணங்கள். அதற்கான நவீன சிகிச்சை முறைகள்… போன்றவற்றை, அதற்குரிய சிறப்பு மருத்துவர்களின் விளக்க உரைகளுடன் வகைப்படுத்தி, சுமார் 48 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரை ஸ்டெம்செல் என்றால் என்ன? அதனால் என்னென்ன நோய்களுக்குத் தீர்வு காண முடியும்? அதன் தொழில்நுட்பம் எந்தளவுக்கு முன்னேறியுள்ளது என்பதை விளக்குகிறது. இதேபோல், இதய நோய்களுக்குரிய நவீன மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள், அதில் ரோபோட்டின் பயன்பாடு, டாவின்ஸி சர்ஜிக்கல் மூலம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிலுள்ள இதய நோயாளிக்கு எப்படி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்பது அதற்குரிய மருத்துவரால் விளக்கப்படுகிறது. இப்படி கண், காது, மூக்கு, பல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், மூளை, ஆஸ்துமா, மஞ்சள் காமாலை என்று பலவற்றுக்குமான நவீன சிகிச்சை முறைகள், உரிய புகைப்படங்களுடன் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. வசதியானவர்களுக்குக் கிட்டும் இந்த நவீன மருத்துவம், சாமானியர்களுக்கு எப்போது கிட்டும் என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது இந்நூல். -பரக்கத். நன்றி: துக்ளக், 19/3/2014.  

—-

மைக்கேல் ஜாக்சன் மரணத்தின் கேள்விகள், ஜெகாதா, முத்துசுந்தரி பிரசுரம், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், சென்னை 17, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-3.html

பாப் இசை உலகின் முடிசூடா மன்னன் என்று இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றை சுவாரஸ்ய பின்னணியுடன் கொண்டு வந்திருக்கும் நூல். புகழின் உச்சியில் அவர் இருந்தபோதே கவ்விக் கொண்ட திடீர் மரணமும் எழுப்பிய கேள்விகளுக்கு ஊகங்களின் அடிப்படையிலான பதில்களை தந்திருப்பதோடு, அவரது இசை சாதனைகள், குடும்ப பின்னணி வரை சொல்லி மைக்கேல் ஜாக்சனின் இதுவரை அறிந்திராத இன்னொரு பக்கத்தையும் புரட்டியிருக்கிறார்கள். சிக்கலான உடல் அசைவுகள்கூட அவர் நடனத்தில் சர்வ சாதாரணமாக வெளிப்பட்டு ரசிகர்களின் பரவசத்தை அதிகரிக்கும். மரணத்திலும் சிக்கல் என்பது தான் இந்த நடனக் கலைஞனின் ரசிகர்களுக்கு இன்றளவும் சொல்லி முடியாத சோகம். நன்றி: தினத்தந்தி, 19/3/2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *