ஸ்ரீ ரமண மகரிஷி
ஸ்ரீ ரமண மகரிஷி, பாலகுமாரன், விகடன் பிரசுரம், சென்னை 2, விலை 160ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-512-0.html பாலகுமாரனின் கவித்துவ நடையில் வெளிவந்துள்ள இந்த நூலைப் படிக்கும்போது, இன்னும் சிலர் மீது பொறாமை உண்டாகிறது. வேங்கடராமனிடம் இரண்டரை அணாதான் இருக்கிறது என்று தெரிந்தபோது, சாப்பாட்டுக்கான விலை இரண்டு அணாவைப் பெற்றக் கொள்ளாமல் வேண்டாம், அந்த இரண்டனாவை நீயே வைத்துக்கொள் என்று சொன்ன புண்யாத்மாவான விழுப்புரம் ஹோட்டல்காரர்… கீழுர்க் கோவிலில், தம்முடைய பங்கான பட்டை சாதத்தை, அந்தச் சிறுவனுக்குத் தரும்படி சொன்ன மேளக்காரர்… இவர்கள் எல்லாம் எத்தனைப் பேறுபெற்றவர்கள். இவர்களின் வாரிசுகளையாவது அடையாளம் காண முடியுமோ? அதிகம் இல்லை. சென்ற நூற்றாண்டின் இடைப் பகுதி வரை வாழ்ந்தவர் பகவான் ரமணர். பாலகுமாரன் சொல்கிற மாதிரி அவருடைய வாழ்க்கை சம்பவங்கள் நிறைந்தது அல்ல. வெறும் சம்பவங்களும் அல்ல. சம்பவங்களின் அடுக்கு அல்ல. அந்தச் சம்பவங்களுக்குள்ளே புகுந்து அவர் வாழ்க்கை என்ன சொல்கிறது என்பது நமக்குப் புரிய வேண்டும். உள்ளார்ந்த தேடல் என்பது யாரோடும் கைகோத்துக் கொண்டு வருகிற விஷயம் அல்ல. கும்பலாக தியானத்தில் ஈடுபடுவதும், ஆன்ம விசாரம் செய்வதும் தொந்தரவைத் தரும். இது அவரவர் கர்ம வினைப்படி நடக்கிற விஷயம். எனவே தனித்துத்தான் இருக்க வேண்டும். தனிமைதான் இன்னும் சரியான கோணத்தல் உள்ளே திருப்பும் என்று ஒரு ராமசாமி அய்யரின் அனுபவத்தைப் பற்றி எழுதுகிறார் பாலகுமாரன். இதுதானே நிஜமான ரமணானுபவம். அருமையான நூல். படிக்கப் படிக்க நம்மை எங்கோ உள்ளிழுத்துப் போகிற ஆனந்தம் கிடைக்கிறது. நன்றி: கல்கி, 23/3/2014.
—-
இறகுதிர் காலம், கோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு, பீளமேடு, கோவை 641004, விலை 100ரூ.
தமிழகத்தின் பறவையினங்களும் பிற உயிர்களும் என்ன பாதிப்பை அடைந்திருக்கின்றன என்று விளக்குகிறது இந்நூல். பள்ளிகரணை ஏரி குப்பைக் காடாக மாறியதிலிருந்து மதுரை மேலூர் கண்மாய்கள் காணாமல் போனது வரை தமிழக சூழல் அதிகார வர்க்கத்தால் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளது என இந்நூல் விளக்குகிறது. நன்றி: இந்தியாடுடே, 26/3/2014.