பெண்ணினத்தின் பேரொளி
பெண்ணினத்தின் பேரொளி, அ. விசாலாட்சி, விஜயகுமார் பதிப்பகம், திருப்பூர், விலை 100ரூ.
முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவு, ஆற்றல், துணிவு, திறமை முதலான சிறப்பியல்களை படம் பிடித்துக் காட்டும் புத்தகம். இதை, அழகிய நடையில் எழுதியிருப்பவர் திருப்பூர் மேயர் அ. விசாலாட்சி. பதவி ஏற்றபின் ஜெயலலிதா ஆற்றிய பணிகளையும், சாதனைகளையும் பட்டியலிட்டு இருக்கிறார் மேயர் விசாலாட்சி. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அ.தி.மு.க. பேச்சாளர்களுக்கு இந்நூல் சிறந்த கையேடாக விளங்கும். நன்றி:தினத்தந்தி, 2/4/2014.
—-
இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ.
உன்னதமான ஆன்மிக குருவைத் தேடி 1930களில் மேற்கத்திய நாட்டில் இருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட பால் ப்ரன்டன், தனது அனுபவங்களை விவரித்து இருப்பது வியக்க வைக்கிறது. மேஜை மீது இருக்கும் இரும்புக் கட்டியை எந்த தொடர்பும் இல்லாமல் நடனமாட செய்தவர். இறந்து போன பறவையை உயிர்ப்பிக்க செய்தவர், ஒருவரது மனதில் உள்ள கேள்வியை மாயாஜாலம் மூலம் படித்து, அதற்கு பதிலை எழுதிக்காட்டியவர் என்று அவர் சந்தித்த யோகிகள், தெருவோர மந்திரவாதிகள், தந்திரக்காரர்கள் பற்றி அவர் தரும் தகவல்கள் மூலம் இந்தியாவில் விளங்கிய வித்தியாசமான மனிதர்கள் பற்றி நாம் அறிந்து கொள்ளமுடிகிறது. இறுதியில் காஞ்சிப் பெரியவர் மூலம், திருவண்ணாமலை ரமண மகரிஷியை அவர் குருவாக அடைந்த வரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது. நன்றி:தினத்தந்தி, 2/4/2014.