புதையல் புத்தகம்
புதையல் புத்தகம், சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, விலை 150ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-813-0.html நானறிந்து தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர் சா. கந்தசாமி. புனைகதையோடு வேறு பல துறைகளிலும் அவர் மிகவும் மதிக்கப்படுபவர். ஓராண்டு அவர் சிறந்த ஓவிய விமர்சகர் என்று விருது வாங்கியிருக்கிறார். தொலைக்காட்சி வந்தபோது அவருடைய பங்களிப்பு, குறும்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என மாறியது. தொலைக்காட்சிக்கென அவர் எடுத்த ஒரு முழு நீளப்படம், மைசூர் இந்திய மொழிகள் நிறுவனத்துக்காக எடுத்த லிபி என்ற படத்தைப் பார்த்தேன். எவ்வளவு ஆற்றல், எவ்வளவு உழைப்பு. அவருடைய நூல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. ஒரு சமீபத்திய நூல் புதையல் புத்தகம். இதை புதையல்கள் புத்தகம் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். பதினேழாம் நூற்றாண்டில் வந்த முதல் தமிழ் அச்சு நூலாகிய தம்புரான் வணக்கம் தொடங்கி, லா.சரா.வின் சிந்தா நதி வரை மொத்தம் 47 நூல்களின் விவரிப்பு. தகவல் களஞ்சியம் தகவல்கள் தரும். ஆனால் கந்தசாமியின் கட்டுரைகள் அந்த நூல்களின் முக்கியத்துவத்தை விளக்குபவை. இன்று தேடினாலும் எளிதில் கிடைக்காத மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் எழுதிய புதினம் பற்றிய கட்டுரையுடன், புதையல் புத்தகத்தில் ஒரு பேரகராதிரி பற்றியும் கட்டுரை இருக்கிறது. நன்றி: குங்குமம், 9/6/2014.
—-
நீதியரசர் மா.மாணிக்கம், சிகரம் ச. செந்தில்நாதன், சிகரம் பதிப்பகம், சென்னை 78, விலை 150ரூ.
புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தால் மா. மாணிக்கம் என்ற நீதிபதியின் வாழ்க்கை வரலாறு போலத் தோன்றுகிறது அல்லவா? ஆனால் அப்படியல்ல. இது ஒரு நாவலின் தலைப்பு. நாவல் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் எந்த ஊரிலாவது மா. மாணிக்கம் என்ற பெயரிலேயே ஒரு நீதியரசர் இருந்தால்…வம்பை விலை கொடுத்து வாங்கியதுபோல் ஆகிவிடாதா. நன்றி: தினத்தந்தி, 4/6/2014.