கானுயிர் ஒளிப்படக் கலைஞர்கள்
கானுயிர் ஒளிப்படக் கலைஞர்கள், பெஸ்ட் போட்டோ கிராபி டுடே, பக். 196,விலை 200ரூ.
புகைப்பட கலைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழில் வெளிவரும் பெஸ்ட் போட்டோகிராபி டுடே குழுமத்தில் இருந்து வந்துள்ள புதினம்தான், இந்த நூல். வைல்டு லைப் போட்டோகிராபி எனப்படும் கானுயிர் புகைப்பட கலை, தற்போது அதிகம் பேசப்படும் ஒரு அற்புதமான புகைப்பட கலை. தங்களின் மனதிருப்திக்காக, பெரும்பாலும் இவர்கள் படம் எடுத்தாலும், சுற்றுச்சூழலுக்கு இவர்களின் பங்களிப்பு பெரிதாக இருக்கிறது. இவர்களுக்குள் ஒரு அறிமுகமும், தொடர்பும் இல்லாத நிலை இருப்பதால், வீண் அலைச்சல், செலவு மற்றும் சிரமங்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்கும் விதத்திலும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையிலும் பிரபலமாக உள்ள மற்றும் பிரபலமாகிக் கொண்டு இருக்கும், வைல்டு லைப் போட்டோகிராபர்கள் பற்றிய விவரங்களை தொகுத்து, இந்த புத்தகம் வெளிவந்துள்ளது. இதை பெஸ்ட் போட்டோகிராபி டுடே ஆசிரியர் என். பழனிக்குமார், அருமையாக தொகுத்துள்ளார். இந்த புத்தகத்தைப் பார்க்கும்போது, தமிழகத்தில் இவ்வளவு திறமையான வைல்டு லைப் போட்டோகிராபர்கள் இருக்கின்றனரா என்ற வியப்பு மேலிடுகிறது. அதிலும், பெண் புகைப்பட கலைஞர்களின் படங்கள் பாராட்டை அள்ளுகின்றன. -எல். முருகராஜ். நன்றி: தினமலர், 22/6/2014.
—-
அருட்தந்தை விக்டர், வ. தாமஸ், ஜான்சி பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், விலை 100ரூ.
அருட்பணி விக்டரின் வரலாற்றினை உரைநடையாகத் தந்ததோடு, நாடக வடிவமாக 2ம் பகுதியில் தந்திருப்பது நூலுக்கான தனிச்சிறப்பாகும். வரலாற்று உணர்வையும், உண்மையான வரலாற்றுக்கான தேடலையும் வாசிப்போரிடம் ஏற்படுத்துகிறது. நன்றி: தினத்தந்தி, 25/6/2014.