பழந்தமிழர் வாழ்வில் பக்தி இயக்கம்

பழந்தமிழர் வாழ்வில் பக்தி இயக்கம், முனைவர் தா. நீலகண்டப் பிள்ளை, செம்மூத்தாய் பதிப்பகம், சென்னை 59, பக். 266, விலை 450ரூ.

தமிழை பக்தியின் தாய்மொழி என்று போற்றுவர். பழந்தமிழர், 3000 ஆண்டுகளாக பக்தியை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதை 33 ஆய்வுக் கட்டுரைகளில் இந்த நூல் அழகுடன் விளக்குகிறது. தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு, பரிபாடல், சிலப்பதிகாரம், மணிமேகலை, கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்கள் காட்டும் சமயச் செய்திகளை ஆதாரப் பாடல்களுடன் கட்டுரைகள் அருமையாய் விளக்குகின்றன. இயற்கை, விலங்கு, அணங்கு, பெருதெய்வம், சிறுதெய்வம், பலியிடம், நீத்தார் சடங்குகள் போன்ற பல தலைப்புகளில் ஆய்வுகள், செய்திகள் அள்ளித் தருகின்றன. பக்தியுடன் படிக்க வேண்டிய பழந்தமிழ் ஆய்வு நூல். நன்றி: தினமலர், 22/6/2014.  

—-

ஸ்ரீ உடையவர் திருவடிகள், ஸ்ரீ.ப.சதாசிவராமானுஜதாசர், ஸ்ரீ உடையவர் பதிப்பகம், கடலூர், விலை 150ரூ.

வைணவத்தின் பெருமையை பறைசாற்றிய ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவருடைய வாழ்க்கையில் நடந்த அற்புதங்களைத் தொகுத்து நாடக வடிவில் வெளிவந்துள்ள நூல். ராமானுஜர் உயர்த்திப்பிடித்த நெறிகளே மனித குலம் உய்வதற்கான ஒரே வழி என்பதை நூலாசிரியர் உணர்ச்சிகரமாக எழுத்து வடிவில் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 25/6/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *