அண்ணாவின் ஆங்கிலக் கட்டுரைகள்
அண்ணாவின் ஆங்கிலக் கட்டுரைகள், திரு.வி.க. நிலையம் பதிப்பகம், வேலூர், விலை 250ரூ.
தமிழைப்போலவே ஆங்கிலத்திலும் வல்லவர், பேரறிஞர் அண்ணா. அவர் ஹோம் லேண்ட் என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழ் நடத்தினார். அதில் 1957 முதல் 1961 வரை அவர் எழுதிய கட்டுரைகள் The Dawn (விடியல்) என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து, புத்தகமாகக் கொண்டு வந்துள்ளவர் வேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஜி.வேதாச்சலம். திராவிட நாடு பத்திரிகையில், தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதங்கள் புகழ் பெற்றவை. அதுபோன்ற கடிதங்கள் இந்த நூலிலும் இடம் பெற்றுள்ளன. அக்கால அரசியல் பற்றி, ஆணித்தரமான கட்டுரைகளை அண்ணா எழுதியுள்ளார். அவருடைய ஆழமான ஆங்கில நடையை ரசிக்க இந்த நூலை படிக்கவேண்டும். வழக்கறிஞர் வேதாச்சலத்தின் முயற்சி பாராட்டுக்கு உரியது. நன்றி: தினத்தந்தி, 13/8/2014.
—-
ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப்பழமொழிகள், தா. பிரியா, திருச்சி, விலை 20ரூ.
இது அனைவருக்கும் குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனளிக்கும் புத்தகம். 1045 ஆங்கிலப் பழமொழிகளும், அவற்றுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 13/8/2014.