தமிழ்க்காதல்
தமிழ்க்காதல், முனைவர் வ.சுப. மாணிக்கம், மல்லிகா, சென்னை, விலை 200ரூ.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டத்துக்கு நூலாசிரியர் வ.சுப.மாணிக்கம் அளித்த அகத்திணை குறித்த ஆய்வு நூல். அகத்திணை என்பது தமிழர் கண்ட காதல்நெறி, தமிழ் மொழி ஒன்றிலே காணப்படும் காதல் இலக்கியம் ஞாலமக்கட்கெல்லாம் உரிய காதல் வாழ்க்கை. ஆதலின் அகத்திணையறிவு பெண்ணுக்கும் ஆணுக்கும் இன்றியமையாக் கல்வியாகும். இதில் அகத்திணை ஆராய்ச்சி, அகத்திணைப் பாகுபாடு, அகத்திணை தோற்றம், அகத்திணைக் குறிக்கோள், அகத்திணைப்பாட்டு, அகத்திணைப் புலவர்கள், அகத்திணைக் கல்வி என்னும் தலைப்பின்கீழ் ஆய்வு செய்துள்ளார் முனைவர் வ.சுப. மாணிக்கம். நன்றி: தினத்தந்தி, 17/9/2014.
—-
சித்தர் பொன்மொழிகள், தமிழ்ப்பிரியன், சங்கர் பதிப்பகம், சென்னை, விலை 75ரூ.
23 சித்தர்களின் பாடல்களில் இடம்பெற்றுள்ள பொன்மொழிகளின் தொகுப்பு நூல். சித்தர்களின் பாடல், அப்பாடல்களுக்கான விளக்கவுரை மற்றும் பொன்மொழிக்கான விளக்கம் ஆகியவை தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளன. இப்பொன்மொழிகள் அறிவுக்கு விருந்தாகும். நன்றி: தினத்தந்தி, 17/9/2014.