நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா?
நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா?, நோசன் பிரஸ், சென்னை, விலை 350ரூ.
40 ஆண்டுகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியை அலிஸ் கே. ஜோஸ்ன் வாழ்க்கை வரலாற்று நூல். ஒரு சாதாரணப் பெண் கூச்சமும், மிரட்சியும் மிக்க ஒரு சாதுப்பெண் எவ்வாறு இறையருளால் மன உரம் பெற்றாள் என்பதைக் கூறுவதே நூலாசிரியரின் நோக்கம். சுயநலத்தோடும், வன்முறையோடும் தீயவற்றைச் சொல்லிலும், செயலிலும் மறைவாகவும், வெளிப்படையாகவும் வெட்கமின்றி வெளிப்படுத்தும் மனிதர்களிடையே நன்மையில் நாட்டம் கொண்டு குற்றங்குறைகளை நீக்கி வாழ முயற்சிப்போர் பலர் உள்ளனர். அவவ்கையில் நல்ல ஆசிரியையாக வாழ்ந்து காட்டி மற்றவர்களுக்கு ஒரு உதாரண ஆசிரியையாக திகழ்ந்திருக்கிறார் ஜோஸ். அவரது வாழ்க்கை வரலாற்று நூல் வாழுகின்ற மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையப்பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 17/9/2014.
—-
கவண்கற்கள், வெ. மதியரசன், குகன் பதிப்பகம், திருவாரூர் மாவட்டம், விலை 75ரூ.
20 அரசியல் மற்றும் இலக்கிய கட்டுரைகள் ஒரு தொகுப்பாக தொகுக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சினைகள், விவாதங்கள், அவலங்கள் சாதாரண மக்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக எளிய தமிழில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 17/9/2014.
—-
உயிர்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும், வெ. தமிழழகன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 90ரூ.
கீரைகளும், கிழங்குகளும் இயற்கை அளித்த கொடை. நம் உடம்பு, சூடு, குளிர் ஆகியவற்றை மையமாக வைத்து இயங்குகிறது. கீரைகளும், கிழங்குகளும் இத்தகைய தன்மையை கொண்டவை. பொதுவாக கீரையை எந்தப் பருவத்தில் சாப்பிடலாம், எந்தக் கீரையுடன் எதைச் சேர்த்தால் அதிகப் பயன் தரும் மற்றும் நோயாளிகள் எந்த கீரையை சாப்பிடலாம், எந்தக் கீரையை சாப்பிட கூடாது போன்றவற்றைப் பற்றி சுவைக்கச் சுவைக்க அதிகம் டிப்ஸ் தரப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 17/9/2014.