துருக்கியில் முஸ்லிம் ஆட்சி
துருக்கியில் முஸ்லிம் ஆட்சி, சையித் இப்ராஹிம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 288, விலை 160ரூ.
இஸ்லாமிய சரித்திரத்தில் துருக்கியர்கள் சிறந்த பங்குபெற்று பணியாற்றி வந்துள்ளனர். இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக கடந்த 100 ஆண்டுகளாக துருக்கியருடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர் என்கிறார் நூலாசிரியர். 1258இல் இருந்து வரலாறு தொடங்குகிறது. பிறகு உர்கான், முதலாம் முராத், முதலாம் பாயஜீத் என நெடிய வரலாறாகப் பயணித்து, 1922 செப்டம்பரில் துருக்கியின் பெரும் பகுதியைக் கைப்பற்றி இருந்த கிரேக்கர்களை, நேசநாடுகளின் உதவியுடன் வெற்றிவாகை சூடியதோடு, துருக்கியில் யதேச்சதிகார முடியரசை முடிவுக்குக் கொண்டுவந்து குடியரசை நிறுவியதுவரை இஸ்லாமியர்களின் பங்களிப்பை விரிவாக விவரித்துள்ளார். மேலும், ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகித்த துருக்கி, நாளடைவில் ஐரோப்பாவின் நோயாளி என்று இழிவு செய்யப்படும் அளவுக்கு ஏற்பட்ட அவலநிலையையும் அதற்கான காரணங்களையும் விரிவாக விளக்கியுள்ளார். வரலாற்று ஆர்வலர்களுக்கு இந்நூல் பயனுள்ளதாகஇருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நன்றி: தினமணி, 15/9/2014.