அறிவார்ந்த ஆன்மிகம்
அறிவார்ந்த ஆன்மிகம், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ.
தினத்தந்தியின் அருள் தரும் ஆன்மிகம் பகுதியில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தீப ஆரத்தி எடுப்பது எதற்காக? கோவில் வழிபாடு ஏன்? உபவாசம் எதற்காக? கார்த்திகை தீபத்தின் சிறப்பு, கும்பாபிஷேகம் எதற்காக? திருநீறு அணிவது எதற்காக? தேங்காய் உடைப்பது ஏன்? ருத்ராட்சம் அணிவதன் சிறப்பு என்பன போன்ற 52 கட்டுரைகளில் இந்து மதத்தில் உள்ள சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் எழுத்தாளர் என். கணேசன் விளக்கியுள்ளார். அந்தச் சடங்குகளின் பின்னணியில் பின்னப்பட்டுள்ள, காரணங்களை ஏன், எதற்காக, எப்படி என்று அலசி ஆராய்ந்து அனைவரு;fகும் புரியும்படி எடுத்துரைக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 24/9/2014.
—-
மரபு வழி மருத்துவம், விகடன் பிரசுரம், சென்னை, விலை 100ரூ.
நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தி மிகக் குறைந்த செலவில் பல நோய்களை தீர்த்துக் கொள்ளலாம் என்கிறார் நூலாசிரியர் முரளி கிருஷ்ணன். நன்றி: தினத்தந்தி, 24/9/2014.