எம்.ஜி.ஆர். எழுதிய நான் ஏன் பிறந்தேன்

எம்.ஜி.ஆர். எழுதிய நான் ஏன் பிறந்தேன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை முதல்பாகம் ரூ.460, இரண்டாம் பாகம் 500ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-200-1.html திரைப்படத்துறையிலும், அரசியலிலும் சாதனைகள் புரிந்து, வரலாற்றில் இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர். எமனுடன் இருமுறை போராடி வெற்றி பெற்றவர். அவர் தன் வாழ்க்கை நான் ஏன் பிறந்தேன் என்ற பெயரில் ஒரு வார இதழில் தொடராக எழுதிவந்தார். சுவையான தொடர். எனினும் அது முற்று பெறவில்லை. எம்.ஜி.ஆர். எழுதிய சுயசரிதை 2 பாகங்களாக நூல் வடிவில் வெளிவந்துள்ளது. இதில் எம்.ஜி.ஆரின் இளமைப்பருவத்தை விரிவாக அறிய முடிகிறது. முதன் மனைவி பார்க்கவி என்கிற தங்கமணியின் எதிர்பாராத மரணம், பிறகு சதானந்தவதியை மணந்த, அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரே கூறி வி.என். ஜானகியை வாழ்க்கைத் துணையாக ஏற்றது ஆகிய நிகழ்ச்சியை எம்.ஜி.ஆர் உணர்ச்சி ததும்ப எழுதியிருக்கிறார். பி.யு.சின்னப்பா, எம்.கே. ராதா ஆகியோருடன் நாடகங்களில் நடித்தது பற்றிய விவரங்களும் சுவையாக உள்ளன. அபூர்வ படங்கள் பல இடம் பெற்றுள்ளன. படங்களை அடிக்குறிப்புடன் வெளியிட்டிருந்தால், அதன் விவரத்தை அனைவரும் அறிந்து கொள்ள உதவியாக இருந்திருக்கும். நன்றி: தினத்தந்தி.  

—-

இவள் நெருப்புக்கு இணையானவர், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 100ரூ.

அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி ஞா.சிவகாமி எழுதிய நாவல். லஞ்ச ஊழல்களுக்கு எதிராகப் போராடும் மணிமொழி மனதைத் தொடும் கதாபாத்திரம். நன்றி: தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *