சட்டமன்றத்தில் திருமாவளவன்
சட்டமன்றத்தில் திருமாவளவன், தொல் திருமாவளவன், கரிசல் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-324-7.html பூவிழியன் தொகுத்திருக்கும் இந்நூலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள், விவாதங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தலித் மக்களின் நலனுக்காக அவர் பேசிய பேச்சுகளும், சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து அவர் எழுதிய கட்டுரைகளும் உண்டு. நன்றி: இந்தியா டுடே, 8/10/2014.
—-
தஞ்சை பெரியகோயில், முனைவர் வி.அ. அன்பழகன், பூங்கொடித்தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், விலை 160ரூ.
தஞ்சை பெரியகோயில் குறித்த அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்ள இந்நூல் பயன்பெறும். கோயிலின் ஓவியங்கள், கல்வெட்டுகள், நாட்டியம், கட்டக்கலை மட்டுமல்லாது கோயில் குறித்தான கற்பனைச் செய்திகள் குறித்தும், கோயிலில் ஏற்பட்ட சேதங்களும் உருக்குலைப்புகளும் குறித்த செய்திகளும் உண்டு. நன்றி: இந்தியா டுடே, 8/10/2014.