பேரறிஞர் அண்ணா களஞ்சியம்
பேரறிஞர் அண்ணா களஞ்சியம், குமுதவல்லி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ.
அப்பாவித் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன், சி.என்.ஏ. என்னும் மூன்றெழுத்தால் அறிமுகமான அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரைக் களஞ்சிய நூல். இந்நூல் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று சுருக்கக் குறிப்பும், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் அண்ணா பற்றி எழுதிய புகழ்மாலை தொகுப்பும், கவிஞர்களின் கவிதைத் தொகுப்பும், அண்ணாவின் மறைவுக்குப் பின் தலைவர்கள் தெரிவித்த இரங்கல் உரைகளும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. திறனாய்வுச் செம்மல் எம்.எஸ்.தியாகராஜன் இத்தொகுப்பை செம்மைப்படுத்தியிருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 8/10/2014.
—-
நரம்பு தளர்ச்சி நீங்க, ஜெகாதா, சங்கர் பதிப்பகம், சென்னை, விலை 15ரூ.
சித்தர்கள் அருளிய நரம்பு சம்பந்தப்பட்ட நோய் நீங்க எளிய மருத்துவம், யோகா, மூலிகைகள் முதலான தகவல்களும் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 8/10/2014.
—-
அற்புதத் திருவந்தாதி, புலவர் தமிழமுதன், முல்லை நிலையம், சென்னை, விலை 30ரூ.
காரைக்கால் அம்மையார் பாடி அருளிய அற்புதத் திருவந்தாதி ஓர் அரிய நூலாகும். அவர் பாடிய பாடல்களில் இருந்து 101 பாடல்களை தேர்வு செய்து அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உரைநடையில் எழுதப்பட்ட நூல் இது. நன்றி: தினத்தந்தி, 8/10/2014.