மூன்றாம் கதாநாயகன்
மூன்றாம் கதாநாயகன், ஏ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன், சென்னை, விலை 160ரூ.
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இதில் 21 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அன்பு வேறு, காதல் வேறு என்பதை எடுத்துக்காட்டும் கதை மூன்றாம் கதாநாயகன். மனைவி இருக்க மற்றவள் மீது மோகம் கொண்டால் குடும்பம் என்னவாகும் என்கிறது என்ன குறை என்ற கதை. ஒரு குடும்பத்திற்கு கணவனோ, மனைவியோ நல்லவிதமாக அமையவில்லை என்றால் அந்த குடும்பத்தின் கதி என்னவாகும் என்பதை காட்டும் வித்தியாசமான நட்பு என்ற கதை. இக்கதைகள் அனைத்தும் குடும்பத்தின் நல்லுணர்வுகளையும், நல்வாழ்க்கையையும் விவரிக்கின்றன. எளிமையான நடையில் சுவாரசியமாக முழு மூச்சில் படிக்கத் தூண்டுகிற விதத்தில் கதைகளைப் படைத்திருக்கிறார் சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜன். நன்றி: தினத்தந்தி. 12/11/2014.
—-
உலக சிந்தனையாளர் எமர்சன், யசோதா பதிப்பகம், நாகப்பட்டினம், விலை 60ரூ.
உலகப்புகழ் பெற்ற சிந்தனையாளர் எமர்சனின் வாழ்க்கை வரலாற்றை மனதைக் கவரும் நடையில் எழுதியுள்ளார் வழக்கறிஞர் டாக்டர் சோ.சேசாசலம். எமர்சனின் பொன்மொழிகள் சிந்தனைக்கு விருந்தளிக்கின்றன. நன்றி: தினத்தந்தி. 12/11/2014.