வேலி மேல் வாச மலர்
வேலி மேல் வாச மலர், பிறமொழிக்கதைகள், தமிழில் வீ. விஜயராகவன், தளம் வெளியீடு, சென்னை, விலை 120ரூ.
பிரேம்சந்த், தாகூர், பகவதி, சரண் வர்மா எனப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்கள் இத்தொகுப்பில் இருக்கிறார்கள். மணி மணியான 12 கதைகள். லாகூர் எவ்வளவு தொலைவு என்ற பஞ்சாபிக் கதை, லாகூரில் வாழ்ந்து, பிரிவினையால் வெளியேற வேண்டியருந்த இந்தியர்கள் இன்னும் எப்படி அந்த நகரத்துக்காக ஏங்குகிறார்கள் என்பதை விவரிக்கிறது. நூர்ஜஹானின் முதல் படத்திலிருந்த பாட்டு, ஓ.பி. நய்யார் வசித்த வீடு எனப் பல தகவல்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இதேபோலப் பல முதிய பாகிஸ்தானியர்களும் இந்தியாவில் உள்ள இடங்களுக்காக ஏக்கம் கொண்டிருக்க வேண்டும். மிக நல்ல தேர்வு, மிக நல்ல மொழிபெயர்ப்பு. நன்றி: குங்குமம், 11/12/2014.
—-
நல்லா எழுதுங்க நல்லதையே எழுதுங்க, ஸ்ரீபதி ராஜன் பப்ளிஷர்ஸ், சேலம், விலை 75ரூ.
பல்வேறு தலைப்புகளில், பல்வேறு விஷயங்கள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட புத்தகம். வாழ்க்கை, திருமணம், மணமுறிவு, இலக்கியம், கவிதை இப்படி பல தலைப்புகளில் சுவைபட எழுதியிருக்கிறார் வழக்கறிஞர் பி.ஆர்.ஜெயராஜன்.
சிந்தனைக்கு விருந்தளிக்கும் கட்டுரைகள், சிரிக்க வைக்கும் நகைச்சுவை கட்டுரைகள் இப்படி நவரசங்களும் கொண்ட புத்தகம் இது.
நன்றி: தினத்தந்தி, 19/11/2014