நாகூர் குலாம் காதிறு நாவலர்
நாகூர் குலாம் காதிறு நாவலர், ஏவி.எம். நசீமுத்தீன், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 128, விலை 50ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-318-2.html தமிழ் மொழிக்கு பல்வேறு அறிஞர்கள் தங்களது பங்கினை ஆற்றியுள்ளனர். அப்படிப்பட்ட தமிழ் அறிஞர்களில் ஒருவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாகூர் குலாம் காதிறு நாவலர். நாகூரில் 1983இல் பிறந்த நாகூர் குலாம் காதிறு, தமிழ் மொழியை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரத்திடமும், அரபி மொழியை முகைதீன் பக்கீர் சாகிபிடமும் கற்றுக் கொண்டவர். காப்பியங்கள், கலம்பகங்கள், அந்தாதிகள், மொழிபெயர்ப்புகள் என்று தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பங்காற்றிய இவர் எழுதிய ஆரிபுநாடகம் என்ற காப்பியம் ஈராக் நாட்டில் வாழ்ந்த மாபெரும் இறைநேசர் சையது அஹ்மதுல் கபீர்பாய் என்பவரைப் பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்பட்டது. விடிவெள்ளி மதினா புக்கார் வியன்குயில் கூறிற்றன்னே என்ற செய்யுளுக்கு கவிஞர் கொடுக்கும் விளக்கம் அற்புதம். நான்காம் மதுரை தமிழ் சங்கத்தின் முதன்மை உறுப்பினர் என்ற சிறப்பைப் பெற்ற நாகூர் குலாம் காதிறு நாவலரின் சுருக்கமான வரலாற்றையும், இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்கு பற்றிய அறிமுகத்தையும் தருகிறது இந்நூல். நன்றி: தினமணி, 1/12/2014.