அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை), தொகுப்பும் உரையும் – ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், சென்னை, பக். 284, விலை 215ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-349-5.html சங்ககாலம் என்பது புனைவானது. சமயவாதிகளால் இட்டுக்கட்டப்பட்டதுதான் மதுரைத் தமிழ்ச் சங்கம் என்றெல்லாம் கருதும் சில ஆய்வாளர்களின் கருத்துகளை மறுத்து, ஆதாரங்களுடன் பல உண்மைகளை முன்வைக்கிறது தொகுப்புரை. சங்க காலத்தில் நூற்றுக்கணக்கான பெண் கவிஞர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும், தொகுப்பாளரின் மனத்தடை, கட்டுப்பாடு, நோக்கம் முதலியவை காரணமாகப் பல பெண் கவிஞர்களின் கவிதைகள் தொகுக்கப்படாமலேயே போயிருக்க வாய்ப்புள்ளது என்றும் கருதும் நூலாசிரியர் 43 பெண் கவிஞர்கள் பற்றிய குறிப்புகளோடு, அவர்கள் எழுதிய சங்கப் பாடல்கள் அனைத்தையும் (நற்றிணை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து முதலானவை) எளிய நடையில் விளக்கவுரையோடு பதிவு செய்திருக்கிறார். இதில் காரைக்கால் அம்மையாரின் படைப்புகளும் ஆண்டாளின் படைப்புகளும் முழுமையாக இடம் பெற்றுள்ளன. தமிழ் மரபின் வேர்களைத் தேடுகின்றவர்களுக்கும், பெண்ணியவாதிகளுக்கும், மாணவ மாணவியருக்கும் இந்நூல் பெரிதும் உதவும் என்று நூலாசிரியர் முன்மொழிந்ததை வழிமொழிந்தே ஆக வேண்டும். நன்றி: தினமணி, 21/12/2014.