இது சக்சஸ் மந்திரம் அல்ல
இது சக்சஸ் மந்திரம் அல்ல, சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 112, விலை 85ர
வாழ்வில் சாதனை புரிந்தவர்களைப் பற்றி எழுதப்பட்ட 24 ஆங்கில நூல்களை அறிமுகம் செய்யும்விதமாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. அந்த நூல்களில் அடங்கியுள்ள செய்திகள் என்ற அளவில் நின்றுவிடாமல், வாசகர்களைச் சாதனையாளராக மாற்றும் முனைப்புடன் நூலாசிரியர் எழுதியிருப்பது வியக்க வைக்கிறது. ‘பெரிய குட்டையில் சிறிய மீன் ஆக இருப்பதைவிட சிறிய குட்டையில் பெரிய மீனாக இருப்பது நல்லது. ‘நம்பிக்கையில்லாதவன் காற்றைக் குறை சொல்வான்; நம்பிக்கையுள்ளவன் மாற்றத்தை எதிர்பார்ப்பான்; தலைவன் என்பவன் படகின் பாய்மரத்தைச் சரி செய்து பயணிப்பான்’. ‘எளிமை என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம். எளிமையான தகவல் பரிமாற்றம், சிக்கலான தகவல் பரிமாற்றத்தை விட சக்தி வாய்ந்தது’. நூல் முழுவதும் இப்படிப்பட்ட கருத்துகள் மின்னுகின்றன. ஆங்கில நூல்களைப் படிக்க முடியாதவர்கள் அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் இந்நூல் உதவும். நன்றி: தினமணி, 14/2/2015.