மனித குல ஆபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி
மனித குல ஆபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி, ச. அய்யாதுரை, தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 104, விலை 80ரூ.
வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனின் மரணம் இயற்கையானதாக இருக்க வேண்டும். விபத்துகளாலோ, இயற்கைச் சீற்றங்களாலோ, பகையாலோ, தற்கொலையாலோ, மனிதன் மரணமடையக்வடாது. மரணத்தை ஏற்படுத்தும் மனிதன் ஆபத்துகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டுள்ள நூல். நீர், நெருப்பு, மின்சாரம் ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகள், இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள், பிற உயிரினங்களால் மனிதனுக்கு ஏற்படும் ஆபத்துகள், பிற மனிதர்களால் ஏற்படும் ஆபத்துகள், மனிதன் தனக்குத் தானே தேடிக்கொள்ளும் நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள், மனம் நொந்து தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் உளவியல் காரணங்கள் என மனிதனுக்கு ஆபத்து ஏற்படும் எல்லாவற்றைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்கிறது இந்நூல். இந்த ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றியும் நூல் கூறுகிறது. ஆபத்தில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்ற அருகில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய முதல் உதவிகளையும் விரிவாகக் கூறுகிறது. பயனுள்ள நூல். நன்றி: தினமணி, 6/1/2015.
—-
திரை இசையில் பாரதியார் பாடல்கள், தொகுப்பாசிரியர் கவிஞர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 35ரூ.
திரைப்படங்களில் பாரதியார் பாடல்கள் இடம் பெற்ற படங்கள், வெளிவந்த ஆண்டு, இசை அமைப்பாளர், அந்த படங்களை இயக்கிய மற்றும் தயாரிப்பாளர்கள் குறித்த தகவல்கள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 28/1/2015.