கண்ணதாசன் முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்)
கண்ணதாசன் முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்), கல்பனாதாசன், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை, பக். 200, விலை 125ரூ.
கலைஞர்கள், அறிஞர்கள் எனப் பல பிரபல மனிதர்களின் நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு, புத்தக உருவம் பெற்றுள்ளது. இதில், மேண்டலின் ஸ்ரீநிவாஸ், கண்ணதாசன், கா.சிவத்தம்பி, கேப்டன் லட்சுமி முதலிய சிர் நம்மிடையே இல்லை. அதுவே இந்நூலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. கண்ணதாசனின் பேட்டியில் தொடங்கி, 22 பிரபலங்களின் விரிவான நேர்காணல்கள் இந்த நூலில் உள்ளன. நேர்காணல்களின் நோக்கம், ஒரு காலகட்டம், அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்து ஒரு நபரின் கருத்து போன்றவற்றை வெளிக்கொண்டு வருவதாக இருந்தாலும், அந்த நேர்காணலை வேறொரு காலகட்டத்தில் படிக்கும்போது, பழைய தகவல்கள்கூட புதிய ஒளி பெறுகின்றன. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே முறையான கல்வி கற்ற கண்ணதாசன், கவிபாடத் துணிந்தது எப்படி எனச் சுருக்கமாகக் கூறுகிறார். கா.சிவத்தம்பி, மேண்டலின் ஸ்ரீநிவாஸ், பரதக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன், வீணை காயத்ரி ஆகியோருடனான நேர்காணல்கள் அருமையான மனிதர்களின் வீட்டு முகப்பு அறையில் அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. அவர்களின் நினைவுகளைக் கூறுவது மட்முல்லாமல், வாழ்வு குறித்த சிந்தனைகளையும் இந்த நூல் பகிர்ந்துகொள்கிறது. நன்றி: தினமணி, 6/1/2015