சாதனையாளர்களின் சரித்திரம்
சாதனையாளர்களின் சரித்திரம், வானதி பதிப்பகம், சென்னை, விலை 65ரூ.
விஞ்ஞானிகள், சரித்திர சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை புதுவிதமாக எழுதியுள்ளார் புதிய தலைமுறையின் கல்வி இதழின் மூத்த துணை ஆசிரியரான ஜி. மீனாட்சி. மாணவ மாணவிகளுக்கு ஏற்ற முறையில் ஒவ்வொருவர் வாழ்க்கையையும் சிறுகதைபோல் எழுதியிருக்கிறார். தெளிவான விறுவிறுப்பான நடை. அணுசக்தி விஞ்ஞான ஹோமி பாபா, விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா, கணிதமேதை ராமானுஜம், விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் உள்பட 9 பேர்களின் வாழ்க்கை வரலாறுகள் நீ உன்னை அறிந்தால் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளன. பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 4/2/2015.
—-
விஞ்ஞான ஆய்வில் ஜோதிடமும் பலன்களும், வெளியீடு பி. கந்தசுப்பு, சென்னை, முதல் பாகம் 100ரூ, இரண்டாம் பாகம் 200ரூ, மூன்றாம் பாகம் 300ரூ.
இந்திய ஜோதிடம் விஞ்ஞான ஆதாரம் கொண்டிருக்கிறத என்பதை ஆய்வுகள் அடிப்படையில் உறுதி செய்யும் இந்த நூல், 3 பாகமாக வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் ஜோதிட மூலமும் தோற்றமும் பற்றி விஞ்ஞான ஆதாரங்களுடனும், விஞ்ஞானத் தகவல்களின் ஒப்பீடு மூலமும் விளக்கப்பட்டுள்ளது. ஜோதிட பலன்கள் குறித்து 3ம் பாகத்திலும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பலருக்கும் தெரியாதிருக்கும் பல ஜோதிடத் தகவல்களை எளிமையாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் என்ஜினீயர் பி. கந்தசுப்பு. முதல் பாகம் விலை 100ரூ, இரண்டாம் பாகம் விலை 200ரூ, மூன்றாம் பாகம் விலை 300ரூ. நன்றி: தினத்தந்தி, 11/2/2015.