may be your are my next love உறவுகளைத் தேடி ஓர் உன்னதப் பயணம்

may be your are my next love உறவுகளைத் தேடி ஓர் உன்னதப் பயணம், கார்த்திக் தம்பையா, டாட் 3 பப்ளிகேஷன், திருச்சி, விலை 200ரூ.

பூவா தலையா? போட்ட காதல் மே பி யூ ஆர் மை நெக்ஸட் லவ் என்று ஆங்கிலத்தில் பிரதானமாகவும், போனால் போகிறது என்கிற மாதிரி உறவுகளைத் தேடி ஓர் உன்னத பயணம் என்று தமிழிலும் தந்திருப்பதை மன்னித்து விட்டு தைரியமாக நூலின் உள்ளே போகலாம். இன்னும் பக்கத்துக்குப் பக்கம் வருகிற ஆங்கிலச் சொற்கள் அவ்ளவையும் ஆங்கில வரி வடிவத்திலேயே கொண்டு போயிருப்பதை புதுமை என்று எடுத்துக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். நூலின் பின் அட்டைக் குறிப்பில் காதல் இதை சாத்தானோட வேலைன்னு சொல்லுவாங்க. அப்படியே வச்சிக்கிட்டாலும் சாத்தான் செஞ்ச உருப்படியான வேலைதான் இந்தக் காதல் என்று சொல்லியிருப்பதை அப்படியே வழிமொழியலாம், இந்த நூலை முழுமையாகப் படித்த முடித்த பிறகு. விமானத்தின் உள்ளேயே பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்யும் யோகி – அதிராவின் அழகான காதல் கதை இது. அவர்கள் கூடவே நாமும் பயணிக்கிற மாதிரி உணரமுடிகிறது. வித்தியாசமான களம், வடிவத்தில் இப்படி ஒரு மேல்தட்டு நாகரிக் கதையை எப்படி இவரால் எழுத முடிகிறது என்பது ஒரு வியப்பு. நீங்க அமெரிக்காவுக்கு எந்த மொழி டிக்ஷனரில அர்த்தம் தேடினாலும் ஒரே ஒரு அர்த்தம்தான் இருக்கும்… சுயநலம் என்று விமர்சனம் செய்கிறபோது ஆசிரியர் மனசிலுள்ள அந்நியமும் தெரிகிறது. -சுப்ர. பாலன். நன்றி: கல்கி, 8/2/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *