எச்சரிக்கை (பற்பசை முதல் பால் வரை)

எச்சரிக்கை (பற்பசை முதல் பால் வரை), செய்திக்குழு வெளியிடு, புதிய வாழ்வியல் பதிப்பகம், பக். 128, விலை 90ரூ.

இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ் செரிக்க, இரண்டு நாட்கள் ஆகும். சிவப்பழகிற்காக தேய்க்கும் கிரீம்களால் என்னென்ன கேடுகள் வரும், மருதாணியின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்ட மெகந்தியைக் கையில் பூசிக் கொள்வதால் வரக்கூடிய தோல் நோய்கள் என்ன? எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பிராய்லர் கோழி, தந்தூரி சிக்கன் வகையறாக்களால் குழந்தைகளும், பெரியோருக்கும் உண்டாகும் கேடுகள், வேதிப்பொருட்களில் கூட்டாக விஷத்தை விதைக்கும் பாக்கெட் பால்… இப்படி அன்றாட வாழ்வில் நான் தினசரி உபயோகப்படுத்தும், சாப்பிடும், புழங்கிக்கொண்டிருப்பவற்றால் என்னென்ன வாழ்வியல் பிரச்னைகள் வரும் என, விரிவாக எச்சரித்திருக்கிறது இந்த நூல். மொத்தம் 22 விதமான பிரச்னைகளைச் சொல்லி அதிலிருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவற்றையும் பதிவு செய்திருப்பதில், இந்நூல் நம் கவனத்தை ஈர்க்கிறது. தன் நலனில், பிள்ளைகள் நலனில், கணவர், குடும்பத்தார், சுற்றத்தாரின் உடல் நலனில் அக்கறை கொண்ட எவரும், அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. ஆயுள் முழுமைக்கும் கையில் வைத்திருந்தால், எந்த நோயையும் நெருங்க விடாமல் செய்ய முடியும். -ம. வான்மதி. நன்றி: தினமலர், 29/3/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *