அர்த்த சாஸ்திர அறிவுரைகள்
அர்த்த சாஸ்திர அறிவுரைகள், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க் வெளியீடு, சென்னை, விலை 150ரூ.
மன்னனின் பூந்தோட்டம் ஐ.சி.எஸ். அதிகாரியாக இருந்த ஏ.எஸ்.பி. அய்யர் ஆங்கிலத்தில் எழுதி த.நா. சேனாபதியின் தமிழாக்கத்தில் வெளிவந்தது சாணக்கியரும் சந்திரகுப்தனும் என்ற அரிய நூல். முதல் பதிப்பு வெளியாகி முப்பத்தோரு ஆண்டுகளுக்குப் பிறகு 1991 இல்தான் அந்த நூல் இரண்டாம் பதிப்பைக் கண்டிருக்கிறது. ஆங்கில மூலத்தையும் தமிழாக்கத்தையும் பலமுறை படித்து அதில் மனம்தோய்ந்த பட்டுத்தொழில் அதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் நூலின் மீதான தம்முடைய சிந்தனையைப் படரவிட்டுள்ளார். கௌடில்யரின் வாழ்க்கை அனுபவங்களைச் சுவைபட எழுதியிருப்பதோடு நிர்வாகவியல் சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஆசிரியர். பூந்தோட்டத்தைப் பராமரிப்பதுபோல் அரசன் தன்னுடைய நாட்டைக் காத்து வரவேண்டும் என்பது கௌடில்யர் காட்டுகிற மார்க்கம். பதினோரு கட்டுரைகளில் வரலாறு, நீதி விளக்கம் தந்துவிட்டுப் பின்னிணைப்பாக 961 அறிவுரைகளின் தமிழாக்கத்தையும் தந்திருப்பதும் பயனுள்ள பணி. – சுப்ர. பாலன். நன்றி: கல்கி, 4/1/2015.