இஸ்லாம் கூறும் திருமண வாழ்வு
இஸ்லாம் கூறும் திருமண வாழ்வு, முவப்பிக்கா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 45ரூ.
சமச்சீர் பெற்ற வாழ்வு திருமணத்தில்தான் உண்டு என்று இஸ்லாம் எடுத்தியம்புகிறது. திருமணம் செய்யாதவன் என் கொள்கையைச் சார்ந்தவன் அல்லன் என்பது நபி மொழி. அந்த வகையில், இஸ்லாத்தில் திருமணம் ஏன் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது? திருமண உறவில் ஆணுக்கும், பெண்க்கும் எத்தகைய உரிமைகளும், கடமைகளும் உள்ளன? திருமண வாழ்வு வெற்றிகரமாக அமைய என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற கேள்விகளுக்கு இரு மணம் கொண்ட திருமண வாழ்வில் என்ற இந்த நூலில் உடன்குடி எம். முகம்மது யூசுப் இறைவசனங்களையும், நபிமொழிகளையும் மேறகோள்காட்டி விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 15/4/2015.
—-
புற்றில் உறையும் பாம்பு, வே. சபாநாயகம், அகிலா பதிப்பகம், சென்னை, விலை 125ரூ.
பல்வேறு இதழ்களில் சிறுகதைகள், குறுநாவல்கள், நூல் விமர்சனங்கள் எழுதியுள்ள தனது படைப்புகளுக்காகப் பல பரிசுகளைப் பெற்றுள்ள எழுத்தாளர் வே. சபாநாயகத்தின் சிறுகதை தொகுதி. அன்றாட நிகழ்வுகள், மனித மனங்களின் இயல்புகள் ஆகியவை இவரது கதைகளில் இயற்கையாக விரிகின்றன. சுவையான, சுறுசுறுப்பான நடை, ரசித்து வாசிக்க வைக்கிறது. சிறுகதைப் பிரயர்களை ஈர்க்கக்கூடிய தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 15/4/2015.