நரேந்திரமோடி சுவைமிகு தேநீர் துளிகள்
நரேந்திரமோடி சுவைமிகு தேநீர் துளிகள், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 270ரூ.
பிரதமர் நரேந்திரமோடி குஜராத் மாநில முதல் மந்திரியாக இருந்தபோது, அந்த மாநிலததை முன்மாதிரி மாநிலமாக மாற்றினார். குஜராத்தில் அவர் நிறைவேற்றிய செயல் திட்டங்கள் குறித்தும், மோடியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றியும், தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் எழுதியுள்ள நூல். பாலைவனமாக இருந்த குஜராத்தை சோலைவனமாக்க மோடி ஆற்றிய நற்காரியங்களை ஆசிரியர் அழகாக எடுத்துக்கூறியுள்ளார். பக்கத்துக்கு பக்கம் மோடியின் வண்ணப்படங்கள். இந்த நூல் சுவைமிகு தேநீர் துளிகளாக மட்டுமல்ல. தேன் துளிகளாகவும் இருக்கிறது. இனிக்கிறது. நன்றி: தினத்தந்தி, 6/5/2015.
—-
கவன ஈர்ப்பு, புதுகை மு. தருமராசன், புதுகைத் தென்றல், சென்னை, விலை 90ரூ.
புதுகைத் தென்றல் பத்திரிகையின் ஆசிரியரான புதுகை மு. தருமராசன், அந்தப் பத்திரிகையில் எழுதிய 63 தலையங்கங்கள் கொண்ட புத்தகம். நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தட்டி எழுப்பும் வேகமும், விறுவிறுப்பும் கொண்ட எழுத்துக்கள். சிந்தனைக்கு விருந்தளிக்கிறது தருமராசனின் பேனா முனை. நன்றி: தினத்தந்தி, 6/5/2015.