வர்ம விமானம்
வர்ம விமானம், இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் தாணுவாலஜி, சென்னை, விலை 10,000ரூ.
வர்மம் என்றால் நரம்பில் எழும் பிணக்கம். நம் உடலில் எண்ணிறைந்த நரம்புகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. உடலில் படும் பல்வேறு பாதிப்புகள் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. வர்ம பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வர்ம மருத்துவத்தால் மட்டுமே சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும். அந்த வகையில் 828 வர்மங்களின் இலக்கணம், பாதிப்பால் நிலவும் நிலைமை, சிகிச்சை வகைகள், பல்வேறு மருந்துகள் போன்றவை குறித்து இந்த நூலில் டாக்டர் எஸ். சிதம்பர தாணுப்பிள்ளை விரிவாக எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்து. 50 ஆண்டுகால ஆய்வின் பயனாக உருவான நூல். வர்மக் கலை குறித்து ஒரு முழுமையான புத்தகம் இது. இதில் வியப்பளிக்கும் ஒரு விஷயம், 629 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ. 10ஆயிரம் என்பது! தமிழில் இந்த விலைக்கு வேறு ஏதாவது புத்தகம் வந்திருக்கிறதா என்பது சந்தேகமே. நன்றி: தினத்தந்தி, 6/5/2015.
—-
நீங்களும் நிருபர் ஆகலாம், ஆ, மலர்தாசன், தெய்வாணை பதிப்பகம், விருத்தாசலம், விலை 100ரூ. மூத்த பத்திரிகையாளர் எழுதிய இந்த நூல், வாழ்வியல் முன்னேற்ற நூல் அனுபவங்களில் சரளமாக உள்ளது. வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.