தூக்கு மர நிழலில்
தூக்கு மர நிழலில், சி.ஏ. பாலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 156, விலை 120ரூ.
பொதுவுடமை சித்தாந்தத்தை உடல், பொருள், ஆவியாகக் கருதிய உண்மையான கம்பூனிஸத் தோழர்களில் சி.ஏ. பாலனும் ஒருவர். மக்கள் நலனுக்காக 15 ஆண்டு, 9 மாதம், 21 நாள்கள் சிறைக் கொட்டடியில் தன் வாழ்நாளைக் கழித்து, மரணத்தின் வாசல் வரை சென்று உயிரோடு மீண்டு வந்த அவரின் நீண்ட, நெடிய மிகக்கொடுமையான சிறை அனுபவமே தூக்கு மர நிழலில். இது 1976இல் புத்தகமாக வெளியானது. அதன் மறுபதிப்பு இது. குற்றம் சுமத்தப்படும் ஒருவரிடம் இருந்து உண்மையை வரவழைக்க நமது அரசு இயந்திரங்கள் எந்த அளவுக்குப் படுமோசமாக நடந்து கொள்கின்றன என்பதை அறியும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிராகக் குரல் உரக்க ஒலிக்கத் தொடங்கியிருக்கும் தருணத்தில் இந்நூல் வெளியாகியிருக்கிறது. மரண தண்டனைக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால், மரண தண்டனையின் கோரமுகம் எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வார்கள். நன்றி: தினமணி, 25/5/2015.