இந்துமதம்
இந்துமதம், கலைஞன் பதிப்பகம், சென்னை, பக். 440, விலை 300ரூ.
இந்து மதம் என்பது பல்வேறு சமயக் கொள்கையின் ஒருமைப்பாடு என்பதை தமிழ் உலகிற்கு நிறுவும் அரிய முயற்சி இந்நூல். பல மெய்ஞானிகள், நான்கு வேதங்கள், 108 உபநிடதங்கள், கீதை, பிரம்மசூத்திரம், பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம், ஆலய தரிசனம், தீர்த்த யாத்திரை என்றெல்லாம் பலவகையான எண்ணிறந்த வழிமுறைகளை நம் இந்து சமய நெறியில் எதற்காக எடுத்து வைக்கப்பெற்றுள்ளன என்பதை இந்நூலைக் கற்போர் யாவரும் புரிந்து கொள்வர். பலதரப்பட்ட மக்கள் வாழும் நம் சமூகத்தில் பல வகையான வழிபாட்டு முறைகளை நம் பெரியோர்கள் எடுத்து வைத்திருப்பன் நோக்கம், எந்த வழிமுறையிலாவது இவர்கள் ஈடுபாடு கொண்டு மெய்ப்பொருளின் சூட்சுமத்தை அறிந்து ஜீவன் கடைத்தேறிக்கொள்ளட்டுமே என்ற கருணையில்தான் என்பதை விளக்கியுள்ளார்கள். வேதங்கள், உபநிடதங்கள், கீதை, சமயக் குரவர்கள், புராணங்கள் வழிநின்று இந்து மதத்தின் ஒட்டு மொத்த சிந்தனை மரபையும் இந்து மதம் என்ற தலைப்பின் கீழ் கொண்டு வந்து தந்துள்ள தொகுப்பாசிரியர்கள் அ.வெ.சுகவனேஸ்வரன், ஸ்வாமி, ந.ரா. முருகவேள், ரிஷபானந்தர், பூ. ஜெயராமன், எஸ். ரகுநாதன், வதேம் ஆகியோரின் செயல் அரிய செயலே. மேலும் தமிழக உலகிற்கு இதை ஒரு பொக்கிஷமாக தந்து, இந்து சமயத்திற்கு ஒரு மிகப் பெரிய தொண்டைச் செய்திருக்கிறார்கள் கலைஞன் பதிப்பகத்தார். பாராட்டுக்கள். நன்றி: குமுதம், 29/6/2015.
—-
உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன, ஆர்.கிளாட்வின் கேப்ரியேல், சென்னை, விலை 90ரூ.
பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் உடல்நிலை, மனநிலை மற்றும் கால நிலைகளைக் கருத்தில் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கட்டமைத்துக் கொள்ளும் வழிமுறைகள் 20 தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 17/6/2015.