சரித்திரப் பிழைகள்
சரித்திரப் பிழைகள், எஸ். அர்ஷியா, புலம், பக். 168, விலை 120ரூ.
சமகால நிகழ்வுகள் குறித்த, இந்நூல் ஆசிரியரின் விமர்சன கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 15 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரையாக, 2011 செப்டம்பர் 11ம் தேதி நடந்த, பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த ஆய்வுக் கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. மதுரை மாவட்டம், யானைமலையை வெட்டி, கோவில் அமைக்க முயன்ற வழக்கில், இயற்கை செய்து வைத்திருக்கும் கலையைக் காட்டிலும் அழகானது வேறு எதுவுமில்லை என்கிறார் நூலாசிரியர். ஓவியர் எம்.எப். ஹூசைன் பற்றிய கட்டுரையில், கலை சுதந்திரம், பா.ஜ., ஆட்சி ஆகியவை குறித்தும், ஆசிரியர் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் எம்.எப் ஹுசைன் குடியேறிய, கத்தார் நாட்டில் இருக்கும் கலை சுதந்திரம், எழுத்தாளர்கள் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் பற்றிய கருத்துக்களை மட்டும் பிறர் கருத்துக்களாக, ஆசிரியர் கூறியிருப்பது முரண். குஜராத்தில் 2004ல் நடந்த போலீசார் துப்பாக்கிச் சூட்டில், நான்கு பேர் பலி, 2002ல் நடந்த, குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அது தொடர்பான விசாரணை அறிக்கை என, பல விஷயங்களை விமர்சித்திருக்கிறார். – சி. கலாதம்பி. நன்றி: தினமலர், 24/5/2015.