இந்தியக் கல்வி வரலாறு
இந்தியக் கல்வி வரலாறு, எஸ். சுப்பிரமணியன், அறிவியல் வெளியீடு, சென்னை, விலை 35ரூ.
கல்வியின் வரலாறு சிந்து சமவெளி காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரைக்குமான காலகட்டத்தில் இந்தியாவில் கல்வி என்பது என்னமாதிரியான மாற்றங்களுக்கு ஆட்பட்டுவந்துள்ளது என்பதைச் சுருக்கமாகவும் ஆழமாகவும் எடுத்து வைக்கும் நூல். வேத காலக் கல்வி, புத்த, சமணத் துறவிகள் பரப்பிய பள்ளிக் கல்வி, நமது முன்னோர்கள் பயின்ற திண்ணைப் பள்ளிகள் என ஒரு நீண்ட காலகட்டத்தின் முக்கியமான சம்பவங்களை நமக்கு முன்னால் வைக்கிறார். இன்றைய கல்வி முறையின் பிரச்சினைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் அறிமுகப்படுத்தவும் விவாதிக்கவும் முயன்றுள்ளார். நன்றி: தி இந்து, 30/6/2015.
—-
5000ஆண்டுகள் தேடிய அறிவுச் செல்வம், தொகுப்பு பால சர்மா, நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 80ரூ.
மனித இனத்தின் அனுபவம் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளாகத்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. எழுத்து கண்டுபிடிக்கப்பட்டதும் ஏறக்குறைய இந்த காலகட்டத்தில்தான். அந்தக் காலகட்டத்திலிருந்து இன்றுவரையான மனித இனத்தில் தோன்றிய பல்வேறு அறிஞர்களின் கருத்துகளின் தொகுப்பு இது. வெளிநாட்டு அறிஞர்கள் மற்றும் இந்திய அறிஞர்கள் எனப் பலதரப்பட்டவர்களின் அனுபவ மொழிகள் இதில் நிரம்பியுள்ளன. மாணவர்களுக்கு பரிசளிக்கச் சிறந்த நூல். நன்றி: தி இந்து, 30/6/2015.